உலகிலேயே டாப்.. நாட்டிலேயே முதலிடம் பிடித்த சென்னை.. நிமிருகிறது காவல்துறையின் "கம்பீரம்".. சூப்பர்
சென்னை: உலக அளவிலான கவனத்தை "சென்னை" தன் பக்கம் திருப்பி வருகிறது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.. என்ன காரணம்?
வந்தாரை வாழ வைக்கக்கூடிய இந்த தமிழகம் பல்வேறு சிறப்புகளை பெற்று வருகிறது. அதிலும், தன்னை நாடிவருவோரை, தடுக்கி விடாதவாறு தாங்கி பிடித்து கொள்வது சென்னை மாநகரம்.

சென்னை: இந்த சென்னையை நம்பி எத்தனையோ ஊர்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.. வடமாநில மக்களும், எதிர்கால வாழ்க்கைக்காக தேடி வருவது இந்த சென்னையைத்தான். அத்தனை பேரையும், ஆபத்தில்லாமல் அரவணைத்து கொள்கிறது சென்னை. அதனால், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை நம்முடைய சென்னை பெற்றுள்ளது.
கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகவும், போஸ்னியா-ஹெர்சகோவினா, பஞ்ஜா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக்...
புதிய ஆய்வு: இவர் தற்போது செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "நம்பியோ" NUMBEO என்ற தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். சமீபத்தில் இந்த நிறுவனத்தின் மூலம், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பற்றி அவர் ஆய்வு மேற்கொண்டார். பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
தற்போது, அந்த ஆய்வின் முடிவையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பான நகரங்களில் உலகளவில், சென்னை 208வது இடத்தை பிடித்திருக்கிறது.. இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.
முதலும் & கடைசியும்: அதாவது, கிரைம் இண்டெக்ஸ் லிஸ்ட்டில் முதல் இடம் பிடிக்கும் நகரம் மிகவும் ஆபத்தானது என்று அர்த்தம். லிஸ்ட்டில் கடைசி இடத்தில் இருக்கும் நகரம்தான், மிகவும் பாதுகாப்பானது என்று அர்த்தம். அந்தவகையில் அளவீடு செய்யப்பட்ட 334 நகரங்களில் சென்னை 208வது இடத்தைப் பிடித்து, பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக உள்ளதாம். குற்ற அளவீடு 40 சதவீதமும், பாதுகாப்பு அளவீடு 60 சதவீதமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி 72வது இடத்திலும், நொய்டா 93வது இடத்திலும், குர்கான் 103வது இடத்திலும் பெங்களூர் 110வது இடத்திலும், கொல்கத்தா 161வது இடத்திலும், மும்பை 175வது இடத்திலும், ஹைதராபாத் 185வது இடத்திலும், சண்டிகர் 187வது இடத்திலும் புனே 194வது இடத்திலும் உள்ளன. இதில்தான், சென்னை 208வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே பாதுகாப்பான நகரமாக மங்களூர் உள்ளது.
பெருமிதம்: இந்திய அளவிலேயே பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளதற்கு, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சொல்லும்போது, "ஏற்கனவே, "அவ்தார்" என்ற நிறுவனம், "வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள்" போன்றவற்றின் அடிப்படையில், இந்த வருட துவக்கத்தில் ஆய்வு ஒன்றினை நடத்தியிருந்தது. அந்த ஆய்வில், 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் என்று சென்னை அறிவிக்கப்பட்டிருந்தது.
டபுள் குஷி: நாட்டிலேயே பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை மீண்டும் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, இங்குள்ள மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, தன்னையே காவல்துறை அர்ப்பணித்து வருகிறது என்றும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications