ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த மின்ரம்பம்.. திருமண நாளில் விபரீத முடிவு எடுத்த பல்லாவரம் ஐடி ஊழியர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்லாவரத்தில் மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி காயத்ரி (39). இவர்களுக்கு மகள் நித்யஸ்ரீ (13), மகன் ஹரி கிருஷ்ணன் (8) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் பிரகாஷும் காயத்ரியும் நேற்று திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

திருப்பதி

திருப்பதி

இந்த நிலையில் காயத்ரியின் தந்தை திருப்பதிக்கு சென்றுவிட்டு லட்டு பிரசாதத்தை மகளுக்கு கொடுக்க காயத்ரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவு நீண்ட நேரமாக திறக்கவில்லை. ஒரு ஜன்னலில் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பேரன், பேத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரத்த வெள்ளம்

ரத்த வெள்ளம்

உடனே பக்கத்து வீட்டில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். அப்போது அவர்கள் போய் பார்த்த போது கதவு தாழிடப்படவில்லை. திருகு கதவு என்பதால் திருகியவுடன் ஓபன் ஆனது. அப்போது குழந்தைகள், பிரகாஷ், காயத்ரி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.

மின்சார ரம்பம்

மின்சார ரம்பம்

பக்கத்தில் மின்சார ரம்பம் ஓடிக் கொண்டே இருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தார் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து அந்த ரம்பத்தின் ஸ்விட்சை ஆப் செய்தனர். இதுகுறித்து பக்கத்து வீட்டில் இருந்தவர் கூறுகையில் ரம்பம் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. நாங்கள் வேக்கம் கிளீனரின் சப்தம் என நினைத்தோம்.

ஆன்லைனில் ஆர்டர்

ஆன்லைனில் ஆர்டர்

பிரகாஷ் வீட்டில் கிளீன் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் இப்படி தற்கொலை செய்து கொண்டது வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றார். பிரகாஷ் கடந்த 19ஆம் தேதி மின்சார ரம்பத்தை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, தற்கொலையாகவே போலீஸார் கூறுகிறார்கள்.

ரூ 3.50 லட்சம் கடன் பத்திரம்

ரூ 3.50 லட்சம் கடன் பத்திரம்

பிரகாஷ் வீட்டில் ரூ 3.50 லட்சம் கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதால், 19 ஆம் தேதிக்கு முன்பு வரை பிரகாஷை போனில் கடனை கேட்டு யாரேனும் மிரட்டினரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரம்பத்தால் கழுத்தை அறுக்கும் போது அவர்கள் மூவரும் சப்தம் போடாமல் இருக்க பிரகாஷ் மயக்க மருந்தை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்றும் தெரிகிறது. ஆனால் வீட்டில் கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில் இந்த முடிவு குடும்பத்தோடு சேர்ந்து எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+