அந்த மனசுதான் சார் கடவுள்.. 100 ஊழியர்களுக்கு 100 மாருதி கார்கள்.. சென்னை ஐடி நிறுவனம் அசத்தல்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐடி நிறுவனம் 100 பேருக்கு 100 கார்களை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் எந்த சாக்கை வைத்து ஊழியரை வேலையிலிருந்து தூக்கலாம், சம்பள குறைப்பு செய்யலாம் என நிறுவனங்கள் சல்லடை போட்டு தேடி வருகிறார்கள்.
இரு ஆண்டுகளாக போனஸ் கிடையாது, ஊக்கத்தொகை கிடையாது, சம்பள உயர்வு கிடையாது, 20 சதவீத சம்பளம் பிடித்தம் என தங்கள் ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் குமுறி வருகிறார்கள்.

வேலையை தக்க வைக்க முயற்சி
கொரோனாவுக்கு முன்னர் இந்த வேலையில்லாட்டி அடுத்த வேலை. அது இல்லாட்டி இன்னொரு வேலை என இருந்தது. ஆனால் கொரோனா வந்தவுடன் எல்லாமே மாறிவிட்டது. கஷ்டமோ நஷ்டமோ கிடைத்த வேலையை எப்படியெல்லாம் தக்க வைத்துக் கொள்ளலாம். பாஸின் மனதை எப்படி குளிர்விக்கலாம் என்ற முயற்சியிலேயே பெரும்பாலானோர் உள்ளனர்.

சென்னை நிறுவனம்
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் ஐடியாஸ்2ஐடி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 500 பேர் பணியாற்றுகிறார்கள். வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் உள்ளது. சென்னை நிறுவனத்தின் உரிமையாளர் முரளி விவேகானந்தன், சிஇஓ காயத்ரி விவேகானந்தன் இருவரும் சேர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கப் பரிசுகளை வழங்கி தட்டி கொடுத்து வருவார்களாம்.

5 ஆண்டுகளுக்கு மேல்
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேல் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை வழங்க இருவரும் திட்டமிட்டனர். அதன்படி சென்னையில் உள்ள மாருதி ஷோரூமிற்கு 100 ஊழியர்களை வரவழைத்து கார்களுக்கு பூஜை செய்து காரின் சாவியை முரளியும் காயத்ரியும் வழங்கினர். இதனால் ஊழியர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

10 ஆண்டுகளுக்கு மேல்
இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில் நாம் பணியாற்றும் நிறுவனத்திடம் இருந்து பரிசு பொருளை வாங்குவது என்பது சிறப்பானது. இது போல் ஊழியர்களை ஊக்குவிக்க ஏற்கெனவே தங்க காயின்கள், ஐபோன்களை நிறுவனம் ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது. ஆனால் கார் என்பது எங்களுக்கு பெரிய விஷயமாகும் என்றார். அது போல் இதுகுறித்து மார்க்கெட்டிங் தலைவராக உள்ள ஹரி சுப்பிரமணியன் கூறுகையில் 10 ஆண்டுகளுக்கு மேல் எங்களுடன் பயணித்து வந்த 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளோம். எங்களுக்கு கிடைக்கும் லாபத்தை அப்படியே எங்கள் ஊழியர்களுக்கு திருப்பி கொடுப்பதுதான் எங்கள் லட்சியம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications