சொத்துக்களை பத்திரப்பதிவு பண்ணனுமா? 7ம் தேதி சர்ப்ரைஸ் இருக்கு.. தமிழக பதிவுத்துறைக்கு எபெயிரா நன்றி
சென்னை: ஜூலை 7-ம் தேதி சுப முகூர்த்த தினம் என்பதால் அன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதற்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

சுபமுகூர்த்த தினம்
மேலும் அவர் கூறுகையில், "ஆனி மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான ஜூலை 7-ம் தேதி அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, ஜூலை 7-ம் தேதி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும். அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும்" என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு வில்லைகள்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, ஜூலை 7, 2025 அன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பதிவு அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கிட நடவடிக்கை எடுத்தமைக்கு தமிழ்நாடு பதிவுத்துறைக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், "ஜூலை 7, 2025 அன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்த நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும், மகிழ்ச்சியும், மனதிருப்தியும் அடைகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுபமுகூர்த்த தினம் - ஆவண பதிவு
மேலும், "இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் ஜூலை 7, 2025 அன்று சுபமுகூர்த்த தினத்தில் ஆவண பதிவு செய்ய விரும்பும் பொதுமக்கள் நலன் கருதி, ஆவணப்பதிவுக்கான முன்பதிவு வில்லைகளை கணிசமாக உயர்த்தியுள்ளார். ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் முன்பதிவு வில்லைகள் 100-க்கு பதிலாக 150 ஆக உயர்த்தியும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் முன்பதிவு வில்லைகள் 200-க்கு பதிலாக 300 ஆக உயர்த்தியும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சாதாரண முன்பதிவு வில்லைகள் 100-க்கு பதிலாக 150 ஆக உயர்த்தியும், முன்பதிவு வில்லைகளோடு, வழக்கமாக வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு, கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளென பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட வழிவகை செய்துள்ளார்" என்று டாக்டர் ஆ.ஹென்றி தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்கள் - நன்றி
ணஜூலை 7, 2025 அன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பத்திரப்பதிவு செய்ய விரும்பும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications