காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு ஸ்பெஷல் நியூஸ்.. திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இன்று பள்ளி விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: புயல் நிவாரணப் பணிகள் தொடர்வதால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவள்ளூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 4-ம் தேதி கடந்து சென்ற மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் தொடர்ந்து மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Chennai, Kancheepuram, Tiruvallur district holiday for schools, college due to Cyclone

வெள்ளநீர்: இன்னும் பல்வேறு சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் வடியவில்லை.. மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல், பலத்த மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கடந்த 4ம் தேதியும், 5ம் தேதி கனமழை தொடர்ந்ததால் அன்றைய தினமும் பொது விடுமுறை விடப்பட்டது. பிறகு, 6ம் தேதி 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்றும்கூட, சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

செங்கல்பட்டு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், இன்றும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், "மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி (நேற்று) வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

இதைத்தவிர, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+