Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

13 ஏரிகள் தண்ணீர்.. கீழ்கட்டளை ஏரியில் நடந்தது என்ன? மொத்தமாக மிதந்த வீடுகள்... வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கீழ்கட்டளை ஏரிக்கு ஏராளமான ஏரிகளின் தண்ணீர் வந்துள்ளது. அந்த தண்ணீர் முழுவதும் நேரடியாக நாராயணபுரம் ஏரிக்கு சென்றது. ஏரியின் கொள்ளளவை விட 5 மடங்கு தண்ணீர் வந்தால் மிகப்பெரிய பாதிப்பு கோவிலம்பாக்கம் மற்றும் கீழ்கட்டளை, பள்ளிக்கரணை பகுதியில் ஏற்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள் .

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து என்பது பல்வேறு ஏரிகளில் இருந்து வருகிறது. முன்னதாக உள்ள கீழ்கட்டளை ஏரி தான் மிக முக்கியமான ஏரி. சிட்லபாக்கம் ஏரி, நன்மங்கலம் ஏரி, பல்லாவரம், குரோம்பேட்டை சுற்றியுள்ள ஏரிகளின் தண்ணீர் நிறைந்தால் அவை அனைத்தும் நேரடியாக கீழ்கட்டளை ஏரிக்குத்தான் வரும்.

chennai keelkattalai lake flood water entered in 10000 families in Kovilambakkam Ward 3

தென்சென்னையில் உள்ளள எல்லா ஏரிகளின் வடிகாலாக கீழ்கட்டளை ஏரி திகழ்கிறது. இந்த ஏரி டிசம்பர் 3ம் தேதியே நிறைந்துவிட்டது. ஆனால் டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதி 36 மணி நேரம் இடைவிடமால் பெய்த மழையால் வழக்கமாக ஏரியில் தேங்க வேண்டிய நீரை விட ஐந்து மடங்கு தண்ணீர் வந்தது.

மிகச்சிறிய கால்வாயாக கீழ்கட்டளை முதல் எஸ் கொளத்தூர், மடிப்பாக்கம் வழியாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை நோக்கி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் டிசம்பர் 4ம் தேதி இரவே ஊருக்குள் வரத்தொடங்கி விட்டது. அதாவது 36 மணி நேர மழை ஆரம்பிக்கும் முன்பே கீழ்கட்டளை, கோவிலம்பாக்கத்தின் 3வது வார்டு பகுதிகளுக்கு வந்துவிட்டது. அதாவது கீழ்கட்டளை ஈச்சனாரி முதல் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி வரை ரேடியல் சாலையின் வடக்கு பக்கம் உள்ள பகுதிகள் முழுமையாக கடந்த ஞாயிறு இரவே தண்ணீரில் மூழ்க தொடங்கின. கீழ்கட்டளை பகுதியும், மடிப்பாக்கமும், உண்மை நகர், என்ஜினியர்ஸ் காலணி, எல்ஐசி நகர், பெரியார் நகர் விரிவாக்கம், ராம்நகர் தெற்கு பகுதிகள் அப்படியே தண்ணீர் மூழ்க தொடங்கியது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 36 மணி நேரம் இடைவிடாமல் கொட்டிய மழையால் கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அகன்ற காவிரி ஆறு போல் ஆர்பரித்தபடி வீடுகளை கடந்து வெள்ள நீர் சென்றது. வெள்ளம் வெளியேற வழியில்லாத பகுதிகளை எல்லாம் உடைத்து தள்ளிவிட்டபடி வேகமாக பள்ளிக்கரணை ஏரிக்கு சென்றது. அந்த காட்சிகள் பார்ப்போரை கலங்க வைக்கும். எல்லா ஏரிகளும் வந்து இணையும் இந்த பகுதிள் இந்த முறை கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தண்ணீர் அனைத்தும் நாராயணபுரம் ஏரிக்குத்தான் சென்றது. நாராயணபுரம் ஏரி டிசம்பர் 4ம் தேதியே நிறைந்துவிட்ட நிலையில், கனமழையால் வந்த அத்தனை வெள்ளமும் அப்படியே பள்ளிக்கரணையை மூழ்கடித்தது.

இதனிடையே சங்கர் என்பவர் வெளியிட்ட வீடியோவில், கோவிலம்பாக்கம் பகுதி முழுவதும் எந்த அளவிற்கு வெள்ளம் வழிந்தோடியது என்பது தெரிந்தது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 13 ஏரிகளின் தண்ணீர் கீழ்கட்டளை ஏரிக்குத்தான் வந்தது. இது எப்படி என்றால் அந்த ஏரியின் மொத்த கொள்ளளவை விட ஐந்து மடங்கு தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் கோவிலம்பாக்கம் 3வது வார்டில் உள்ள 10000 குடும்பங்களை பாதித்தது என்று கூறினார். இப்போது அந்த பகுதியில் தண்ணீர் வடிந்துவிட்டது என்றாலும் அந்த வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது என்கிறார்கள் கோவிலம்பாக்கம் மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+