அய்யோ! செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் கேரள மாணவி.. திடீரென வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ்... ஷாக்
சென்னை தாம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
சென்னை: சென்னை தாம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழந்தார். செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த மாணவி நிகிதா பிஎஸ்சி சைக்காலஜி படித்து வந்துள்ளார்.
ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டாம் என்று ரயில்வே துறையினர் பலமுறை எச்சரித்துள்ளனர். தண்டவாளங்கள் வழியாக செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.
மேலும் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதையை பயன்படுத்தி ரயில்வே பகுதியில் க்ராசிங்கை கடக்க வேண்டும் என்றும் ரயில்வே துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் மக்கள் வேகமாக ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு உடனே செல்ல தண்டவாளத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

மக்கள் வருத்தம்
அப்படி தண்டவாளத்தில் நடந்து சென்று ரயில் பாதையை கடக்கும்போது அடிப்பட்டு உயிரிழக்கிறார்கள். இப்படி சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். குறிப்பாக தாம்பரம் பெங்களத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக இத்தகைய உயிரிழப்புகள் நடப்பது மக்களை வருத்ததில் ஆழ்த்தி உள்ளது.

கேரள மாணவி
சென்னை தாம்பரம் இரும்புலியூரில் தங்கி கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி நிகிதா வயது (19). இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நிகிதா இன்று காலை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள தண்டவாளத்தை செல்போன் பேசிய படி கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து வண்டலூர் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் விரைவு ரயில் மாணவி நிகிதா மீது வேகமாக மோதியது.

மாணவி பலி
இதில், தூக்கி வீசப்பட்ட மாணவி நிக்கிதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தண்டவாளம்
ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டாம் என்று போலீசார் பலமுறை சொல்லியும் கேட்பது இல்லை. அதுவும் தண்டவாளங்களை செல்போனில் பேசிக்கடப்பது பேராபத்தை விளைவிக்கும் என்பது பல்வேறு சம்பவங்கள் உணர்த்தினாலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக தாம்பரம் பெங்களத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக இத்தகைய உயிரிழப்புகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் அருகே ரயில் மோதி காதல் ஜோடி பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications