Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்ட நெருங்கிவிட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலைய தொடக்க விழா! கொசுறு தகவலையும் சொன்ன அமைச்சர்! ஆஹா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எப்போது திறப்பு விழா என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகிறார்கள்.

Chennai Kilambakkam Bus terminus will be ready by Mid November, says minister

இந்த நிலையில் மக்கள் அதிகமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயன்படுத்தத் தொடங்கியதால் இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த பேருந்துகளை நிறுத்துவதற்கு இடமில்லாத சூழல் உள்ளது.

இந்த நிலையில்தான் தென் மாவட்ட பயணிகளுக்காகவே சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் போடப்பட்டு அமைக்கப்பட்டு வருகிறது. ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த இந்த பேருந்து நிலையில் 2018ஆம் ஆண்டே திறக்கப்படும் என சொல்லப்பட்டது.

ஆனால் கட்டுமான பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக் கொண்டே போனது. இந்த ஆண்டு இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவீதம் கூடுதலாக செல்வு செய்து இந்த முறை பணிகள் முடிந்ததாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியது. ஏர்போர்ட் ரேஞ்சுக்கு கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மழை நீர் தேக்கம் என்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து வடிகால் வசதி அமைக்கப்பட்டது. அது போல் அந்த பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் இல்லை என சொல்லப்பட்டது.

ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் வைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகும். அது போல் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெய்லி எழுத்து முறையும் இங்கு இல்லை என சொல்லப்பட்டது. மேலும் சில இடங்கள் வழுக்கும் நிலையில் இருப்பதாகவும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து கிளாம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சொன்ன குறைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எபபோது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை இன்று காலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் போக்குவரத்து நெரிசல், மழைநீர் வடிகால் அமைக்காதது உள்ளிட்ட முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் பேருந்து நிலைய திறப்பு விழா தாமதமானது. 4 சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணிகளும் வடிகால் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகள் எல்லாம் நவம்பர் 20 ஆம் தேதி முடிவடையும். இதன் பிறகு முதல்வரிடம் கேட்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த பேருந்து நிலையம் அருகே விரைவில் போலீஸ் நிலையம் கட்டும் பணிகளும் தொடங்கப்படுகிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+