சென்னையை அலறவிட்ட ரேகா.. மிட்நைட்டில் அசிங்கமா போச்சு.. குலுங்கிய கொளத்தூர்.. பாவம் அந்த பெண் போலீஸ்
சென்னை: சென்னை கொளத்தூரையே அதிர வைத்துள்ளார் ரேகா என்ற பெண்.. யார் இவர்? நள்ளிரவில் என்ன நடந்தது?
சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு சம்பவம் நடந்தது.. வாலாஜா ரோட்டில், இரவு நேரத்தில் 3 பெண்கள் குடித்துவிட்டு ரகளை செய்திருக்கிறார்கள். ரோட்டில் நடந்து சென்றவர்களிடம் வம்பிழுத்திருக்கிறார்கள்.
முகசுளிப்பு: பொதுமக்கள் அவர்களை கட்டுப்படுத்த முயன்றும், அந்த 3 பேரும் யார் பேச்சையும் கேட்கவில்லை. முகம் சுளிக்கும் வகையில் இந்த பெண்கள் நடந்து கொண்டபடியே இருந்ததால், கன்ட்ரோல் ரூமுக்கு பொதுமக்களே போன் செய்து புகார் தந்தார்கள்.

பிறகு போலீசார் விரைந்துவந்து விசாரித்ததில், அந்த 3 பெண்களும் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த ஒரு கல்யாணத்துக்கு, விருந்து பரிமாற வந்தவர்களாம்.. கல்யாண விருந்து முடிந்ததும், இவர்களின் "விருந்து" ஆரம்பமாகிவிட்டது போலும்.. 3 பெண்களும் நடுரோட்டில் தாறுமாறாக அமர்க்களம் செய்ததால், திருவல்லிக்கேணி போலீசார் அவர்களின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதோ இன்னொரு பெண் சிக்கி உள்ளார்.. சென்னை கொளத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் ரேகா.. 26 வயதாகிறது.. இவர் புத்தகரம் அருகே பைக்கில் வந்துகொண்டிருந்தார்.. அப்போது மணி நள்ளிரவை தாண்டி விட்டது.
மதுபோதை: மதுபோதையில் பைக்கை ஓட்டிக் கொண்டுவந்துள்ளார்.. இதனால் சாலையில், தாறுமாறாக வண்டி சென்றுள்ளது.. பிறகு திடீரென ஒருஇடத்தில் தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.. எனவே, ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பூர் பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. ஆனால், அப்போதும் அவருக்கு போதை இறங்கவில்லை. அதனால், தனக்கு சிகிச்சை அளித்த வந்த டாக்டர்கள், நர்சுகளை அசிங்க அசிங்கமாக பேசினார்..
வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கு பிறகு, தகவலறிந்த பெரவள்ளூர் போலீசார், மருத்துவமனைக்கு சென்று ரேகாவிடம் விசாரணை நடத்தினார்.. போலீசார் வந்தபிறகும்கூட, ரேகாவுக்கு குடிபோதை இறங்கவில்லை.. போலீசாரையும் தரக்குறைவாகவே பேசினார்.. அதுமட்டுமல்ல, தன்னிடம் விசாரிக்க வந்த பெண்போலீஸை, திடீரென தாக்கிவிட்டார்..
செல்போன் ஹெட்செட்: அத்துடன், அவர் அணிந்திருந்த பேட்ஜ், செல்போன் ஹெட்செட்டை அறுத்து வீசியெறிந்தார்.. சுற்றிநின்று அனைத்து போலீசாரையுமே ஆபாசமாக திட்டியிருக்கிறார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேகாவை கைது செய்ததுடன், புழல் சிறையிலும் அடைத்துள்ளனர்.
ஆனால், ரேகா உதிர்த்த அத்தனை கெட்ட வார்த்தைகளும், அட்டகாசங்களும் வீடியோவாக சோஷியல் மீடியாவில் வெளியாகிவிட்டது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
பியூட்டி பார்லர்: போதையில் ரேகா இருந்ததால் அவரிடம் எந்த விசாணையையும் போலீசாரால் மேற்கொள்ள முடியவில்லை.. இதற்கு பிறகுதான், ரேகா யார் என்ற விவரத்தை விசாரித்திருக்கிறார்கள். ரேகா ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறாராம்.. சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படிப்பையும் படித்து வருகிறார்.. சில வருடங்களுக்கு முன்பு கல்யாணமாகியிருக்கிறது.. அதுமட்டுமல்ல, இவர் 2 குழந்தைகளின் தாயும்கூட... என்னத்த சொல்றது?!!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications