ஏங்க அது தூக்க கலக்கம்தான்.. ஆளுநர் ரவி சொன்னது தவறு.. எந்த அச்சுறுத்தலும் இல்லை! அர்ச்சகர் விளக்கம்
சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில் இன்று ஆளுநர் ஆர்என் ரவி தரிசனம் செய்தார். அப்போது கோவில் பூசாரிகள் முகத்தில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்ததாக அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் கோவில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் எல்இடி ஸ்கீரின் மூலம் கும்பாபிஷேக விழாவை நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் அந்த ஸ்கீரின்கள் அகற்றப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் எல்இடி ஸ்கீரின் வைக்க போலீசின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழ்நாட்டில் பொதுமக்கள் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இந்த தரிசனத்தை முடித்த பிறகு தமிழக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது - ஆளுநர் ரவி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த பதிவு என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் பூசாரிகள், கோவில் ஊழியர்களின் முகங்களில் பயம், அச்சம் உணர்வு இருந்ததாக கூறிய ஆளுநர் ஆர்என் ரவியின் கூற்றை கோவில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர். அதன்படி சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில் அடக்குமுறை எதுவும் நடக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநருக்கான பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி முறையான மரியாதை அளிக்கப்பட்டது என கோவிலின் மோகன் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். இரவு விழித்திருந்து பூஜைக்கு தேவையான வேலைகளை பார்த்ததால் முகத்தில் சோர்வு தெரிந்திருக்குமே தவிர, தமிழக அரசால் எங்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications