சென்னை + குமரி + நீலகிரிக்கு இன்று விடுமுறை.. கோவை பள்ளி, கல்லூரிக்கும் விடுமுறை.. ஓணம் கொண்டாட்டம்
சென்னை: இன்று ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் கோவை, சென்னை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாகவே, கேரள எல்லையையொட்டியுள்ள தமிழகத்தின் பகுதிகளுக்கும், கேரள மக்கள் குடும்பத்துடன் படையெடுத்து வந்தனர்..

காரணம், திருவோணம் அத்தப்பூ கோலமிட்டு உலகை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதால், அத்திப்பூ கோலமிட தேவையான பூக்களை, தோவாளை பூச்சந்தையில் கிடைக்கும் என்பதால் கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி சென்றார்கள்.
ஆர்எஸ் புரம்: அதேபோல, கோவை ஆர்.எஸ்.புரம் அருகே, ஆர்.ஜி வீதியில் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது... இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரிகள் பூ விற்பனையில் ஈடுபட்டனர்.. ஓணம் பண்டிகை தினம் நெருங்குவதைத் தொடர்ந்து கோவை பூமார்க்கெட்டிலும், பூக்களின் விற்பனை தீவிரமடைந்தது.
நெரிசல்: செண்டு மல்லி, வாடா மல்லி, மல்லி, வெள்ளை செவ்வந்தி, வண்ண செவ்வந்தி, அரளி ஆகிய பூக்கள் அதிகளவில் வாங்குவார்களாம்.. இந்நிலையில், இன்றைய தினம் ஓணம் பண்டிகை என்பதால், கேரளாவே விழாக்கோலம் பூண்டுள்ளது.. அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாக ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுளள்து. காரணம், கேரள எல்லையில்தான் நீலகிரி உள்ளது.. அதனால், ஏராளமான கேரள மக்கள், நீலகிரியில் வசித்துவருகிறார்கள்.
ஓணம் பண்டிகை: எனவே, ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு செப்டம்பர் 16ம் தேதி பணி நாளாக செயல்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார்.

அதேபோல சென்னையிலும், மலையாள மொழி பேசுபவர்கள்,. மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில், இன்றைய தினம், சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 2ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம்: அதேபோல, கேரள எல்லையில் உள்ள கோவை மாவட்டத்திலும், கடந்த 10 நாட்களாகவே ஓணம் பண்டிகை வருவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் கொண்டாட்டம் வெகுவாக களைகட்டி வருகிறது. இன்று பண்டிகை என்பதால், கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு, இதற்கு பதிலாக, செப்டம்பர் மாதம் 2-ந் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழு பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications