கோயம்பேட்டில் நிசப்தம்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டே காலி.. திடீர்னு முளைத்த பிரச்சனை.. இது யாரு புதுஸ்ஸா
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, வெறிச்சோடி காலியாக உள்ள நிலையில், இன்னொரு சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளது.. என்ன அது?
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதற்கு பிறகு, பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இயக்கப்பட்டு வருகின்றன.. இந்த பஸ்களும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை..

சமூக விரோதிகள்: பஸ் ஸ்டாண்டில் எந்நேரமும் 2100 பஸ்கள் தினமும் வந்த நிலையில், தற்போது வெறிச்சோடி உள்ளது... பயணிகளின் நடமாட்டம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தைதான் சமூக விரோதிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளதாக தெரிகிறது..
சுற்றுவட்டார பகுதிகளிலிருக்கும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் போன்றோர், குற்ற சம்பவங்களை செய்துவிட்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பதுங்கி கொள்வதாக புகார் எழுந்ததுள்ளது.. இவர்களை தவிர, மதுப்பிரியர்களும் இங்கேயே குடித்து கும்மாளமிட்டு பதுங்கிவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன...
குற்ற சம்பவங்கள்: கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் ரவுடிகள், திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்டில் வந்து பதுங்கிவிடுவதாகவும், பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே கைவரிசையை காட்டுகிறார்களாம்..
இதனால், குறைந்த அளவுக்கு வந்து போகும் பயணிகளும் அச்சமடைவதாகவும், அந்த பகுதியிலிருப்பவர்கள் தெரிவித்தனர்.. அதனால், வெறிச்சோடி கிடக்கும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தபடியே உள்ளனர்.
கண்டக்டர்: இதுகுறித்த செய்திகள் தொடர்ந்து எழுந்தநிலையில்தான், கண்டக்டரிமே கைவரிசை காட்டப்பட்டுள்ளது.. சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு பஸ்ஸில், கண்டக்டரின் டிக்கெட் பை கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாம். தன்னுடைய டிக்கெட் பை இல்லாததை கண்டு, அதிர்ச்சி அடைந்த அந்த கண்டக்டர், கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்..
இதையடுத்து, இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. அந்த டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.38 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட் இருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டக்டரின் பையை திருடியது யார் என்று தெரியவில்லை.. ஆனால், கோயம்பேடு கண்டக்டரிடமே கை வரிசை காட்டப்பட்டுள்ள இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications