கோயம்பேட்டில் கொல்லப்பட்ட டான்சர்.. இப்ப தோழியும் மரணம்.. சென்னை பாரில் எப்படி 17 வயது சிறுமி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு நட்சத்திர ஓட்டல் மதுபான பாரில் ஏற்பட்ட திடீர் மோதலின் தொடர்ச்சியாக, நள்ளிரவில் பைக்கில் சென்ற இளம்பெண்கள் மீது சொகுசு காரை ஏற்றி படுகொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தலைநகரையே உலுக்கிவிட்டது. இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வந்த 17 வயது சிறுமியும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது சென்னையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் யாசினி (18). இவருக்கு இன்ஸ்டாகிராம் தளம் மூலம் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

Koyambedu Dancer Case Chennai Bar Minor Girl

சென்னை கோயம்பேடு பார்

அந்த நண்பரின் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்த யாசினி, பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்துள்ளார். பிறகு கடந்த மே மாதம் 31ம் தேதி இரவு கோயம்பேட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் நட்சத்திர ஓட்டல் மதுபான பாருக்கு யாசினி சென்றுள்ளார்.. அவரது தோழியான 17 வயது சிறுமி மற்றும் இன்ஸ்டாகிராம் நண்பர் உள்ளிட்டோரும் யாசினியுடன் சென்றுள்ளனர். அங்கிருந்த பாரில் அனைவரும் மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்த பாரில் இருந்த பாலகுரு மற்றும் சிவன் சக்திவேல் தலைமையிலான மற்றொரு தரப்பினர், இளம்பெண் யாசினியிடம் அநாகரிகமான முறையில் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

பாரில் டான்ஸ் ஆடிய பெண்

இதனை யாசினியுடன் வந்த இளைஞர் தட்டிக்கேட்டபோது, 2 தரப்பினருக்கும் இடையே பாரின் உள்ளேயே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றவே, அங்கிருந்த பவுன்சர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் இரு தரப்பையும் உடனடியாக பாரை விட்டு வெளியேற்றினார்கள்

வெளியே வந்த பிறகும் ஆத்திரம் அடங்காத இரு தரப்பினரும் சாலையிலேயே மீண்டும் மோதிக்கொண்டனர். இந்த ஆக்ரோஷமான மோதலின்போது, யாசினி அங்கிருந்த கல்லை எடுத்து பாலகுருவின் சொகுசு காரின் கண்ணாடியை வீசி உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு போனது பாலகுரு தரப்பு.

கார் ஏற்றி பெண் யாசினி கொலை

ஆனால் அதற்குள் யாசினியும் அவரது 17 வயது தோழியும் உடனடியாக பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.. அவர்களை பின்னாடியே துரத்தி கொண்டு போன அந்த கும்பல், திமுக கொடி கட்டப்பட்ட தங்களது காரில் மிக அதிவேகமாக துரத்தியது. நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாலையில் பைக்கை விரட்டி நெருங்கிய கார், அவர்கள் மீது மிகக் கொடூரமாக மோதியது.

காரின் வேகத்தில் தூக்கி வீசப்பட்ட யாசினி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற 17 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சென்னை கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

17 வயது சிறுமியும் மரணம்

இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் காரை இயக்கிய சிவன் சக்திவேல், பாலகுரு, கல்லூரி மாணவர் கிஷோர் குமார், சுமன், ஜோஸ்வா உள்ளிட்ட 7 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுமியும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது மேலும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. 17 வயது சிறுமியை நள்ளிரவில் மதுபான பாருக்குள் அனுமதித்தது எப்படி என்று சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விதிமீறலில் ஈடுபட்ட அந்த தனியார் நட்சத்திர ஓட்டல் பாருக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+