கோயம்பேட்டில் லுலு மால் இல்லை.. அதைவிடுங்க.. மொத்தம் 29 கடைகள்.. விடலையே ஆபீசர்ஸ்.. பரபரத்த மார்கெட்
சென்னை: கோயம்பேட்டில் லுலு மால் பரபரப்பு அடங்கிய நிலையில், அடுத்த பரபரப்பு எகிறி உள்ளது.. மொத்தம் 29 கடைகள் சிக்கிஉள்ளன. என்ன நடந்தது?
கோயம்பேட்டில் லுலு மால் அமைக்க போவதாக தகவல்கள் பரபரத்து கொண்டிருக்கின்றன.. இதையடுத்து, பாமக தலைவர் அன்புமணி உள்பட இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கோயம்பேடு: "சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலம், அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது" என்று காட்டமாக கூறியிருந்தார்.
ஆனால், இதற்கு தமிழக அரசு விளக்கம் தந்திருந்தது.. "சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லூலூ மால் அமைக்க தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். இதை உண்மை என நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இந்த தகவல் முற்றிலும் தவறானது. சித்தரிக்கப்பட்டது. அதனால், ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயலாகும் என்று கூறப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்கெட்: ஆனாலும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு குறித்த பரபரப்புகள் தொடர்ந்தபடியே உள்ளன.. இதனிடையே, கோயம்பேடு காய்கறி, பூ மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்க தவறிய 14 கடைகளுக்கு அங்காடி நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காமல் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருவதாக அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன..
லைசென்ஸ்: இதையடுத்து, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையில் அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் நேரடியாகவே கிளம்பி சென்று ஆய்வு செய்தனர். அப்போதுதான், உரிமம் புதுப்பிக்காத கடைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லூலூ மால் அமைக்க தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். இதை உண்மை என நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இந்த தகவல் முற்றிலும் தவறானது. சித்தரிக்கப்பட்டது. அதனால், ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயலாகும் என்று அரசு தெரிவித்துள்ளது
எச்சரிக்கை: உடனே அங்காடி நிர்வாக சார்பில், கடை உரிமம் புதுப்பிக்க வலியுறுத்தி, அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பலமுறை எச்சரித்தனர். அப்படியிருந்தும்கூட, வியாபாரிகள் உரிமத்தை புதுப்பிக்கவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 21ம் தேதி முதல்கட்டமாக அங்காடி நிர்வாகம் சார்பில் 8 கடைகளுக்கு சீல் வைத்தனர். கடைகளுக்கு சீல் வைத்ததுமே, பதறிப்போன சில வியாபாரிகள் கடையின் உரிமத்தை புதுப்பித்தனர்... எனினும் உரிமம் புதுப்பிக்க தவறியதால் 2ம் கட்டமாக அதே மாதம் 25ம் தேதி மேலும் 7 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
வார்னிங்: 3ம் கட்டமாக நேற்றுகூட கோயம்பேடு காய்கறி மற்றும் பூ ஆகிய மார்க்கெட்டில் கடை உரிமம் புதுப்பிக்க தவறிய 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆகமொத்தம் இதுவரை 29 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.. மீதமுள்ள கடைகளின் உரிமம் புதுப்பிக்க தவறினால், அனைத்து கடைகளுக்குமே விரைவில் சீல் வைக்கப்படும் என்று வார்னிங் தரப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications