கூட்டுறவு கடைகளில் மகிழ்ச்சி.. சென்னை கோயம்பேட்டை விடுங்க.. தக்காளி இங்கே எவ்ளோனு பாருங்க.. சூப்பர்ல
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து காய்கறிகளின் விலை உயர்வு இருந்துவரும் நிலையில், தக்காளி விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்?
தமிழகத்தில் அதிகமாக பயிரிடப்படும் காய்கறிகளில் முக்கியமானது தக்காளி.. இதைத்தவிர, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களிலிருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி போன்ற பகுதிகளிலிருந்தும் தக்காளி அதிகமாக விற்பனைக்கு வருகின்றன.

எனினும், காலநிலை மாற்றம் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நிலவிய கடும் வெயிலை தொடர்ந்து, பருவமழையும் தொடங்கிவிட்டதால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தக்காளி வரத்து குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.. எனவே, கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்: கோயம்பேடு மார்க்கெட்டிலேயே 70, 80 ரூபாய் என்பதால், சில்லறை விற்பனையில் ரூ. 100 வரை தக்காளி விற்பனையானது. இதற்கு பிறகு, கடந்த வாரங்களில் திடீரென விலை குறைந்து விற்கப்பட்டது. கிலோ ரூ.40-க்கு தக்காளி விற்கப்பட்டது. ஆந்திராவிலிருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்ததாக காரணம் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு நேற்று முன்தினம் தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ. 80 ஆக அதிகரித்துவிட்டது..
இப்படி தக்காளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவதால் பொதுமக்கள் தடுமாறி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், கூட்டுறவு கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகின்றன.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை 63 பண்ணை பசுமை காய்கறி கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. இதில் சென்னையில், மட்டுமே 20 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
உருளைக்கிழங்கு: இந்த கடைகளில், வெங்காயம், கத்தரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. தக்காளியை எடுத்துக் கொண்டால், வெளிச்சந்தையில் கிலோ தக்காளி விலை, 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவதால், கூட்டுறவு காய்கறி கடைகளில் கிலோ தக்காளி, 38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் உள்ள கடைகளில் மட்டும் தினமும் சராசரியாக, 2 டன் தக்காளி விற்கப்படுகிறது... வியாபாரிகள் மொத்தமாக வாங்குவதை தடுப்பதற்காகவே, தலா ஒருவருக்கு, 2 கிலோ வழங்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
திடீர் ஆய்வுகள்: இதனிடையே, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு வளாகத்தில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க காய்கறி கடை, பல்பொருள் அங்காடி, மருந்தகம் ஆகியவற்றில், கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் இது சம்பந்தமான ஆய்விலும் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏற்ற இறக்க விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால், கூட்டுறவு காய்கறி கடைகளில் கிலோ தக்காளி, 38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் உள்ள கடைகளில் மட்டும் தினமும் சராசரியாக, 2 டன் தக்காளி விற்கப்படுகிறது... வியாபாரிகள் மொத்தமாக வாங்குவதை தடுப்பதற்காகவே, தலா ஒருவருக்கு, 2 கிலோ வழங்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
திடீர் ஆய்வுகள்: இதனிடையே, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு வளாகத்தில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க காய்கறி கடை, பல்பொருள் அங்காடி, மருந்தகம் ஆகியவற்றில், கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் இது சம்பந்தமான ஆய்விலும் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications