கோயம்பேட்டில் மீண்டும் மாறுதல்.. சின்ன வெங்காயத்தின் விலை பாருங்க.. பெரிய வெங்காயம் அதுக்குமேல.. ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு, கனமழை, தேவை அதிகரிப்பு, தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வெங்காயம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்தவகையில், நேற்றைய விலையை விட, இன்று விலை மேலும் உயர்ந்து, 100-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இது இல்லத்தரசிகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது.

சமீபகாலமாகவே, மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்படுகிறது.. இதில் வெங்காயம் விலையானது தொடர்ந்து ஏறிவருகிறது..

little onion prices

வெங்காய விளைச்சல்: இந்தியாவை பொறுத்தவரை, வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 30.41 சதவீதம் மகாராஷ்டிராவில்தான் விளைகிறது.

இதற்கு அடுத்ததாக கர்நாடகாவில் 15.51 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 13.66 சதவீதமும் விளைகின்றன. ஆனால், தமிழகமோ 13 வது இடத்தில் உள்ளது.. வெறும் 1.65 சதவீதம் மட்டுமே இங்கு வெங்காயம் விளைச்சலாகிறது. அதனால்தான், வெங்காய தேவைக்கு மகாராஷ்டிராவையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

மழைக்காலம்: எனினும், மழைக்காலம் என்றாலே, வெங்காயத்தின் விளைச்சலில் பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகும்.. தற்போது மழைக்காலம் துவங்கியிருக்கும் நிலையில், வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் மற்றும் வட மாநிலங்களில் அறுவடை முடிவடைந்ததால், வெங்காயம் விலை உயர்ந்திருப்பதாக காரணம் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் தேவை அதிகரித்தவாறே உள்ளதும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாகும்.

நேற்றைய தினம், கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை உச்சிக்கு போய்விட்டது.. வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.. இதுவே வெளி சந்தையில் ஒரு கிலோ 120 முதல் 130 ரூபாயை எட்டியிருந்தது..

100-ஐ தாண்டியது: இந்நிலையில், இன்று ஒரே நாளில் கிலோ ரூ.100க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் வெங்காயம் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி சுமார் 60 வாகனங்களில் 1,300 டன் நாசிக் வெங்காயம் வருவது வாடிக்கையாகும்.

வரத்து குறைவு: ஆனால், இன்று 500 டன் மட்டுமே வந்திருக்கிறதாம். அதனால்தான் விலை உயர்ந்துள்ளதாகவும், வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என்றும் வியாபாரிகள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த வெங்காயத்தின் விலையானது இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது..

வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் வழக்கமாக வாங்கும் அளவைவிட தற்போது, குறைந்த அளவிலேயே வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் விலை அதிகமாக இருந்தாலும், பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சின்ன வெங்காயம்: சின்ன வெங்காயமும் விலை டபுள் மடங்காகிவிட்டது.. மதுரை உள்ளிட்ட பிரதான மார்க்கெட்டில் வரத்து குறைவால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, ஒரு கிலோ வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் புதிய விளைச்சல் கெட்டுப் போய்விட்டதாம்.. இதனால், பழைய இருப்புகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், முறையான குளிர்பதன கிடங்கு வசதி இல்லாததால், இருப்பு வைக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

பெரிய வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரி சுகுமார் சொல்லும்போது, "மகாராஷ்டிரா மாநிலத்தில் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையும், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ரூ.50, ஆந்திர மாநிலத்தில் ரூ.40-க்கும் பெரிய வெங்காயம் இப்போது விற்கப்படுகிறது.

எப்போது குறையும்: இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடந்து வருவதால், தொழிலாளர்கள் பலர் பிரச்சாரத்துக்கு சென்றுவிடுவார்கள்.. எனவே, வழக்கமான தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது... அதுமட்டுமல்லாமல், பெரிய வெங்காயத்தின் 2-வது பருவ பயிர் முடிவுக்கு வரும் நேரம் இதுவாகும்.. பெல்லாரி பகுதிகளிலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்திருக்கிறது. அதனால்தான், பெரிய வெங்காயம் வரத்து குறைந்து, விலையும் உயர்ந்துள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+