சின்ன வெங்காயம் வரவழைத்த கண்ணீர்.. சென்னை கோயம்பேடில் திடீர்னு உயர்ந்த காய்கறி விலை.. கலங்கும் மகளிர்
சென்னை: வரத்து காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்தபடியே இருக்கிறது.. புரட்டாசி மாதம் முடிந்த நிலையிலும், இந்த காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது..
கடந்த மாதம் முழுவதும் புரட்டாசி என்பதால், இறைச்சி விலை வீழ்ச்சியடைந்தது.. அதற்கு மாறாக, காய்கறிகளின் விலை உயர்ந்துவிட்டது.

காய்கறிகள்: வழக்கமாக, சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தைவிட இந்த வாரம், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வார விலைப்பட்டியலை பார்த்தால், பீன்ஸ் - ரூ.70, அவரை - ரூ.60, கத்தரி - ரூ. 25, வெண்டைக்காய் - ரூ.15, புடலங்காய் - ரூ.15, பீர்க்கங்காய் - ரூ.30-க்கும் விற்பனை ஆனது.
பச்சை மிளகாய்: அதேபோல, பச்சை மிளகாய் - ரூ.20, கேரட் ரூ. 40, வெங்காயம் - ரூ.80, சேனைக்கிழங்கு - ரூ.40, முருங்கைக்காய் - ரூ. 80, உருளைக்கிழங்கு - ரூ.25, என்றிருந்தது.
இப்போது, இஞ்சி, வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக, விலை இன்னும் சற்று அதிகரித்துள்ளது.. அதன்படி, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 1 கிலோ 30 ரூபாய்க்கும் கோயம்பேட்டில் விற்பனையாகி வருகிறது.
சின்ன வெங்காயம்: இதில் அதிக அளவு அதிர்ச்சியை தந்துள்ளது சின்ன வெங்காயம்தான்.. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 130 ரூபாய் என்கிறார்கள்.. வெங்காயம் இல்லாமல், தமிழ்நாட்டில் சமையலே செய்ய முடியாத நிலைமை உள்ளது..
தினந்தோறும் சமையலுக்கு வெங்காயம் தேவையாக உள்ள நிலையில், அதன்விலை இப்படி ஒரேடியாக எகிறிவிட்டது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது. அதிலும் இப்போது பண்டிகை காலம் என்பதுடன், மழை காலமும் தொடங்கிவிட்டதால், வெங்காயம் விலை தாறுமாறாக எகிறிவிட்டது..
பெருகும் எதிர்பார்ப்பு: கடந்தவாரம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 90க்கு விற்ற நிலையில், இப்போது கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு அதிகமாகும் என்பதால், பொதுமக்கள் இப்போதே கவலை கொண்டுள்ளனர். ஒருவேளை, இந்த விலை உயர்வு தொடரும்பட்சத்தில், தமிழக அரசு ஏதாவது நடவடிக்கையை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications