Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகைக்கு வீட்டை எடுத்து சென்னையில் விபச்சாரம்.. மடிப்பாக்கம் அப்பார்ட்மென்ட்டில் போலீஸ் நுழைந்தால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முறையான அனுமதியை பெறாமல், லைசென்ஸை புதுப்பிக்காமல், ஸ்பா என்ற பெயரில் இயங்கி வரும் மசாஜ் சென்டர்களில் விபச்சாரங்கள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. எனவேதான், மேற்கண்ட இடங்களில் போலீசாரின் சோதனைகள் நடந்து வருகின்றன. அதேபோல வாடகைக்கு வீட்டை எடுத்து, இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்தவகையில், சென்னையில் இன்றும் ஒருவர் கைதாகி உள்ளார்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Chennai Madipakkam Crime today

பாலியல் தொழில்

அந்தவகையில் சென்னை நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகர், எட்டியப்பன் தெருவிலுள்ள அந்த குறிப்பிட்ட வீட்டிற்குள், பல கல்லூரி மாணவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் அடிக்கடி வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கும் புகார்கள் வந்தன.

இதனால், நெற்குன்றம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை ரகசியமாக நேற்றைய தினம் கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டிற்கு மட்டும் அடிக்கடி இளைஞர்கள் வந்து சென்றது உறுதியானதுமே, உடனடியாக அங்கு போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்

அங்கே 55 வயதான பாலியல் புரோக்கர் ராஜா என்பவர், 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, ராஜாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

நெற்குன்றம் பகுதியில் ஏராளமாகன என்ஜினியரிங் காலேஜ் உள்ளதால், அந்த மாணவர்களை குறிவைத்து விபச்சார தொழிலில் இறங்கியதாகவும், இதற்காகவே, அந்த பகுதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாகவும் புரோக்கர் ராஜா வாக்குமூலம் தந்தார்.

மடிப்பாக்கம் அப்பார்ட்மென்ட்

மேலும், இதற்காகவே வாட்ஸ் அப் குரூப்பை துவங்கி, அதில் பெண்களின் போட்டோக்களை அப்லோடு செய்து பாலியல் தொழில் செய்து வந்ததாகவும் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து, ராஜாவை கைது செய்த போலீசார், அங்கிருந்த 2 இளம் பெண்களையும் பத்திரமாக மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதோ இன்றைய தினமும் மடிப்பாக்கத்தில் ஒருவர் சிக்கியிருக்கிறார். மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில், சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக குடியிருப்பு வாசிகள் சார்பில் புகார் வந்தது.

அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு- 2 இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 2வது தெருவில் உள்ள குடியிருப்பில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்..

31 வயது ஆந்திரா புரோக்கர்

அப்போது, ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த லத்தீப் என்ற 31 வயது நபர், என்பவர் இளம் பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லத்தீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், லத்தீப் ஏற்கனவே பல்வேறு பாலியல் புரோக்கர்களிடம் உதவியாளராக பணியாற்றியதும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் தனியாக பாலியல் தொழில் தொடங்கியதுஙம் தெரியவந்தது. அதைதொடர்ந்து, லத்தீப்பை போலீசார் கைது செய்ததுடன், அங்கிருந்த இளம்பெண்ணையும் பத்திரமாக மீட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+