சென்னையில் 29 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்.. இதை கவனிச்சீங்களா!
சென்னை: சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் இப்படி மழை கொட்டி தீர்க்கும். ஆனால், இந்த முறை தென்மேற்கு பருவமழை காலத்தில் இப்படி நடந்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நடந்ததாகவும், அதற்கு பின்னர் இப்போதுதான் இப்படி நடந்திருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இந்தியா முழுவதும் இரண்டு பருவமழைகள், பரவலாக மழைப்பொழிவை கொடுக்கும். ஒன்று தென்மேற்கு பருவமழை, இன்னொன்று வடகிழக்கு பருவமழை. இதில் தென்மேற்கு பருவமழை என்பது, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் கனமழையை கொடுக்கும். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி திருநெல்வேலி, தென்காசி, மேற்கு விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், கேரளாவின் பெரும்பாலான பகுதிகளிலும், மேற்கு கர்நாடகாவிலும் மழை பரவலாக பெய்யும்.

இந்த பருவமழை காலத்தில் வழக்கமாக வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் மழை இருக்காது. காரணம் குளிர்ந்த காற்று கிழக்கிலிருந்து வீசுவதில்லை. அது மேற்கிலிருந்து மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளின் வழியாக வந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோதி மேலெழுகிறது. இதனால் காற்று குளிர்ந்து மழைப்பொழிவை கொடுக்கிறது. தமிழகத்தின் டெல்டா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மலைகள் இல்லாததால் இயல்பாகவே இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு குறைவு.
இருப்பினும் வடகிழக்கு பகுதியான சென்னையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்திருக்கிறது. இது ஆச்சரியமான விஷயம்தான். எல்லா காலத்திலும் இப்படி மழை பெய்யாது. கடைசியாக கடந்த 1996ம் ஆண்டு உருவான புயலின் போது இப்படி மழை பதிவாகியிருந்தது.
இது குறித்து தனது x தளத்தில் பதிவிட்டிருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்த நிலையில் மூன்றாவது நாளும் மழை பெய்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இது ஒரு அதிசய நிகழ்வு. 1996ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்பட்ட புயல் மழையின்போது இப்படி மழை பெய்திருந்தது. இதற்கு பின்னர் தென்மேற்குப் பருவமழையின் போது இந்த மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்தது கிடையாது" என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து மூன்று நாட்கள் கனமழை பெய்திருக்கிறது. இன்று பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியிருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் கொஞ்சம் சிரமமடைந்திருக்கின்றனர்.
முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில், ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24 முதல் 28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (23-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications