சென்னை சைதாப்பேட்டையில் பிரபல தங்க நகைக்கடையில் ஊழியர் செய்த வேலை.. ஆடிப்போன உரிமையாளர்
சென்னை: சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை பகுதியை சேர்ந்த அபய்சுந்தர் என்பவர் தங்க நகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் வேலை பார்த்து வந்த ராஜஸ்தான் மாநிலம் அஜ்மிர் பகுதியைச் சேர்ந்த ரோகித் என்ற இளைஞர் 48 பவுன் தங்க நகைகளை கடந்த மாதம் 13-ந்தேதி கொள்ளையடித்து சென்றார். அவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
தங்கத்தின் விலை கடந்த 6 மாதத்தில் புதிய உச்சம் பெற்றுள்ளது. ஒரு பவுன் தங்கம் 72ஆயிரம் என்கிற அளவில் விற்கிறது.செய்கூலி சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்தால் 80 ஆயிரம் என்கிற அளவில் ஒருசவரன் தங்கம் சென்னையில் விற்கப்படுகிறது.வெறும் ஆறு மாதத்தில் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெறும் 3 மாதத்தில் 10 அளவிற்கு உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. நகைக்கடை வைத்திருப்போர் தங்கத்தின் விலை உயர்வால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கவே முடியாதா என்று ஏக்க பார்வை பார்க்கிறார்கள்.

தங்கம் விலை எந்த அளவிற்கு உயருகிறதோ, அதுபோல் தங்க நகைகளை திருடுவதும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வேலை செய்பவர்களே நகைக்கடைகளில் திருடுவது அவ்வப்போது நடக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை பகுதியை சேர்ந்த 35 வயதாகும் அபய்சுந்தர் என்பவர் தங்க நகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் வேலை பார்த்து வந்த ராஜஸ்தான் மாநிலம் அஜ்மிர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் ரோகித் (24) என்பவர் 48 பவுன் நகைகளை கடந்த மாதம் 13-ந்தேதி கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அபய்சுந்தர் அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நகைகளுடன் தப்பியோடிய ரோகித்தை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரோகித்தை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 42½ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் அவருக்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சென்னை பாடியின் பிரபல நகைக்கடையிலும் இதேபோல் நகைக்கடை ஊழியர்கள் நகைகளை திருடி கைதாகினார்கள். இது தொடர்பாக பாடி நகைக்கடை மேலாளராக உள்ள சுரேஷ் என்பவர் கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில், எங்களுடைய பாடி தங்க கடையில் நகை பிரிவு மேலாளரான இளையராஜா தங்க, வைர நகை பிரிவில் நகைகளின் இருப்பை சோதனை செய்திருந்தார். அப்போது, 54 ஜோடி தங்க கம்மல், 8 வைர வளையல் மற்றும் சங்கிலி உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும். நகையை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
இதுகுறித்து கொரட்டூர் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அந்த கடையில் நகைகள் பிரிவில் பணியாற்றி வரும் முத்துகிருஷ்ணன்(வயது29) மற்றும் விஜயகுமார்(37) ஆகியோர் கையாடல் செய்ததாக கைது செய்தனர். இவர்களில் முத்துகிருஷ்ணன், தங்க நகைகளை எடுத்து அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாறு கையாடல் செய்த தங்க கம்மல்களை பல்வேறு பகுதிகளில் அடமானம் வைத்து, அதில் கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தனராம். விஜயகுமார், வைர நகைகளை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து தனது கடனை அடைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.. ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் இறுதியில் நடந்ததாகும்.












Click it and Unblock the Notifications