ஆந்திராவுக்கு வரவைத்து.. கட்டையால் அடித்தே கொல்லப்பட்ட எலக்ட்ரீசியன்.. காரணம் கள்ளக்காதல்!
Recommended Video
சென்னை: மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டிருந்த நபரை, ஆந்திராவுக்கு வரவழைத்து அடித்தேக் கொன்ற கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். 42 வயதான இவர் எலக்ட்ரீசியன் ஆவார். லேபர் பள்ளித் தெருவில் வசித்து வந்தார். டிசம்பர் 18ம் தேதி இவர் ஆந்திராவுக்குப் போவதாக கூறி விட்டுப் போயுள்ளார். ஆனால் திரும்பவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது.

சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் கார்த்திகேயன் ஆந்திராவில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட விவரம் தெரிய வந்தது.
ஒரு பிளாஷ்பேக்... ஆந்திர மாநிலம் சித்தூர் எஸ்சி காலனி 2வது தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மனைவி பெயர் மாதேஸ்வரி. சிவக்குமாருடன் அவரது தாயாரும் வசித்து வருகிறார். சிவக்குமாரின் சகோதரர் அனகாபுத்தூரில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில்தான் கார்த்திகேயன் வீடு உள்ளது.
சிவக்குமார் சகோதரர் வீட்டுக்கு வந்த சமயத்தில் மாதேஸ்வரிக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்பு சித்தூர் வரை விடாமல் போயுள்ளது. இருவரும் செல்போனில் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இது அரசல் புரசலாக சிவக்குமாருக்குத் தெரிய வரவே அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கார்த்திகேயனை காலி செய்ய முடிவு செய்த சிவக்குமார் அவரை ஆந்திராவுக்கு வரவழைத்தார். அங்கு வைத்து உருட்டுக்கட்டையால் கார்த்திகேயனை சரமாரியாக அடித்துக் கொலை செய்தார். பின்னர் உடலை புதைத்து விட்டார். இந்த கொலை குறித்து மாதேஸ்வரிக்கும் தெரியும் எனக் கூறப்படுகிறது.
விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீஸார் சிவக்குமார், மாதேஸ்வரியைக் கைது செய்தனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. இரவுக்குள் பூண்டி ஏரியை அடையும்! கோடையில் சென்னைக்கு நிம்மதி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications