கூவம் ஆற்று வெள்ளத்தில்.. பைக்குடன் அடித்து செல்லப்பட்ட நபர்.. கதி என்ன?.. தீவிர தேடுதல் வேட்டை!
சென்னை: மதுரவாயல் தரைப்பாலத்தில் ஓடிய வெள்ளத்தில் பைக்குடன் அடித்து செல்லப்பட்ட நபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது.
Recommended Video
இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மதுரவாயலில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திலும் வெள்ள நீர் செல்வதால் அந்த தரைப்பாலம் மூடி வைக்கப்பட்டுள்ளது.

பைக்குடன் அடித்து செல்லப்பட்டார்
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது வெள்ளத்தில் வேகத்தில் இருவரும் சிக்கினார்கள். அதில் அதில் மோட்டார் சைக்கிள் பின்புறம் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்த கம்பியை பிடித்து தப்பித்தார். ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் மோட்டார் சைக்கிளுடன் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

தடுப்பை மீறி...
மழை நின்று பத்து நாட்களாகியும் நீரின் வேகம் குறையாததால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாலத்தை மூடி வைத்திருந்தனர். ஆனால் இருவரும் தடுப்பை மீறி சென்றதால் விபத்து ஏற்பட்டது. அந்த நபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேடுதல் பணி
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டவர்களை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை குறித்த அடையாளம் தெரியாததால் தேடுதல் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டு வருகிறது இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர் சம்பவம்
மதுரவாயல் கூவம் ஆற்றில் தரைப்பாலத்தில் இதேபோல் கடந்த வாரம் ஒரு நபர் அடித்து சென்று மீட்கப்பட்டார். மேலும் ஒருவர் அடித்து செல்லப்பட்டு இறந்து போனார். தொடர்ந்து இதேபோல் நிகழ்ந்து யாரும் நிலையில் அஜாக்கிரதையால் மீண்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications