மாமா பார்த்துட்டாரு.. கரெக்ட்டா "வளையல்" போடும்போது.. சென்னை மாங்காட்டில் கள்ளக்காதல் ஜோடி அட்டகாசம்
சென்னை: நெஞ்சிலேயே தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முடியுமா? இதுதான் மாங்காடு போலீசாரின் முதல் சந்தேகமாக வலுத்தது.
மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில், ஒரு அப்பார்ட்மென்ட் கட்டப்பட்டு வருகிறது.. இது தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு ஆகும்.. மிகப்பெரிய அப்பார்ட்மென்ட் என்பதால், வடமாநில தொழிலாளர்களும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கட்டிட வேலைகள்: இதற்காகவே, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் குடும்பமாக வந்துள்ளார்கள்.. இங்கேயே தங்கியிருந்து கட்டிட வேலைகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோனியா என்பவர், மாங்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார்.. சோனியாவுக்கு 33 வயதிருக்கும்.
கொலை: தன்னுடைய கணவர் மோகன் புஜக்கர் (38), வீட்டில் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் சொன்னார்.. இதனால், மாங்காடு போலீசாரும், மோகன் வீட்டிற்கு விரைந்து சென்றார்கள்.. அங்கிருந்த மோகன் புஜக்கர் சடலத்தையும் மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
இதற்கு பிறகு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.. ஆனால், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மோகனுக்கு யார் யார் விரோதிகள்? என்ன காரணத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்? என்பதெல்லாம் உடனடியாக தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. அதில், மோகனுக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டிருப்பதால், யாரோ கத்தியால் குத்தியே கொன்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது..
சந்தேகம்: இதற்குபிறகுதான், போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கினார்கள்.. முதல் சந்தேகமே, மனைவி சோனியா மீது போலீசாருக்கு திரும்பியது. சோனியாவை கண்காணிக்கும்போது, மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுசாந்தா பர்மன் என்பவர் மீதும் சந்தேகம் வலுத்தது.. இதையடுத்து, சோனியா + சுசாந்தா இருவரையும் பிடித்து விசாரித்தார்கள். அப்போதுதான் உண்மை வெளிவந்தது.
மோகன், சோனியா இருவரும் தங்கி வேலை செய்து வந்தநிலையில், சோனியாவிற்கும், சுசாந்தா பர்மன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே கள்ளக்காதலாக மாறியிருக்கிறது..
கள்ளக்காதல்: இதற்கு பிறகு, சோனியாவை பார்ப்பதற்காக சுசாந்தா, அடிக்கடி வீட்டிற்கும் வந்து சென்றுள்ளார்.. மோகனுக்கு இந்த விஷயம் தெரிந்து, சோனியாவை கண்டித்துள்ளார்.. ஆனால், சோனியா, சுசாந்தா இருவருமே மோகனின் பேச்சை கண்டுகொள்ளவில்லை.. சம்பவத்தன்றும், சோனியாவை பார்க்க சுசாந்தா வந்துள்ளார்..
அப்போது, சோனியாவிற்கு அவர் வளையல் அணிவித்துள்ளார். அப்போதுதான், மோகன் அங்கு கரெக்ட்டா உள்ளே நுழைந்துள்ளார்.. தன்னுடைய மனைவிக்கு சுசாந்தா வளையல் போட்டதை பார்த்து ஆவேசமானார்..

திடீரென உள்ளே நுழைந்த மோகன், கள்ளக்காதல் ஜோடியின் அட்டகாசத்தை பார்த்து அதிர்ந்து போனார்.. பிறகு, மோகனுக்கும், சுசாந்தாவுக்கும் கடுமையான வாக்குவாதத்தில் நடந்துள்ளது.. இதில், ஆவேசமடைந்த சுசாந்தாபர்மன், தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மோகனின் மார்பில் சரமாரியாக குத்திக்கொன்றுவிட்டார்..
பரபரப்பு: கணவன் கண்ணெதிரே இறப்பதை பார்த்தபிறகுதான், சோனியா போலீசுக்கு ஓடிவந்து நாடகமாடியது தெரியவந்தது. இப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி ஜெயிலில் உள்ளது.. பிழைப்புக்காக வந்தஇடத்தில் நடைபெற்ற இந்த, கள்ளக்காதல் + கொலை + கைது சம்பவங்கள் மாங்காட்டை அதிரடி வைத்து வருகின்றன.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications