வேற லெவலில் மாறும் மெரினா பீச்! 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற.. பணிகளை மேற்கொள்ள அனுமதி!
சென்னை: சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழகத்தின் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான உட்டகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. நீலக்கொடி சான்றிதழ் என்பது தூய்மை, சுத்தமான மனல், சுற்றுச்சூழல் மேலாண்மை பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலை உள்ளிட்ட சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

அந்த வகையில், இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கடற்கரைகளுக்கு இந்த நீலக்கொடி சான்றிதழ் வாங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆறு கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் 4 கடற்கரைகளில் 18 கோடி செலவில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான உட்டகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ரூபாய் 6 கோடியில் மெரினா கடற்கரை, 4 கோடியில் கடலூர் சில்வர் கடற்கரை, 4 கோடியில் நாகை காமேஸ்வரம் கடற்கரை, 4 கோடியில் ராமநாதபுரம் அரியமான் கடற்கரை ஆகிய 4 கடற்கரையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும். மேலும், கடற்கரையில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரியத் தாவரங்கள் குறித்த ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் கடற்கரை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும்.
இந்த பணிகள் முடிந்த பின்னர், கடற்கரையை ஆய்வு செய்து டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் இந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications