சென்னைக்கு வரும் ரோப் கார்.. மாஸ் காட்டும் மெரினா! மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு!
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா, மாமன்ற கூட்டத்தில் முன்வைத்திருக்கிறார். இதில், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் தொடங்கி, அண்ணா நினைவிடம் வரை இந்த ரோப் கார் சேவை முதற்கட்டமாக தொடங்கப்பட இருக்கிறது.

சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ், மெரினா தொடங்கி பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவையை கொண்டுவர சென்னை மாநகராட்சி கடந்த 2022ம் ஆண்டே முடிவு செய்திருந்தது. இதற்கான ஆலோசனைகள் மற்றும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த பணிகளின் ஒரு பகுதியாக, லைட் ஹவுஸ் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கடந்த 2024ம் ஆண்டு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது.
இதற்காக தனியார் நிறுவனம் சமீபத்தில் மெரினாவில் 30 அடி வரை பள்ளம் தோண்டி மண் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது. இது மீனவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரோப் கார் சேவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரோப் கார் அமைக்கப்பட்டால் சுமார் 50-100 அடி உயரத்திலிருந்து மெரினாவின் அழகை ரசிக்க முடியும். மட்டுமல்லாது ரோப் கார் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக அமைக்கப்பட உள்ளது.
ரோப் கார் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படுகிறது என்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவது என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த ரோப் கார் இடையில் 2 நிறுத்தங்களை கொண்டிருக்கும். ஒன்று கண்ணகி சிலை மற்றொன்று விவேகானந்தர் இல்லம். ஒரு கேபினில் 8-10 வரை அமர்ந்து பயணிக்க முடியும். அதேபோல, இத முழுக்க சூரிய மின்சக்தியால்தான் இயங்கும். எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.285 கோடியாகும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அறிக்கை கிடைத்தவுடன் கட்டுமானத்திற்கான டெண்டர் கோரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருக்கிறார்.
-
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!











Click it and Unblock the Notifications