சென்னையில் மசாஜ் தெரபிஸ்ட்டை தரதரனு பெட்ரூமுக்கு இழுத்து சென்ற நபர்.. கேமராவில் பார்த்ததால்? அட இவரா
சென்னை: மசாஜ் சென்டர் தெரபிஸ்ட் தந்த புகாரானது, காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இது தொடர்பான நடவடிக்கையை சென்னை விருகம்பாக்கம் மகளிர் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் இந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்கவில்லை.
மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பிரியா.. 32 வயதாகிறது.. இவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில் உள்ளதாவது:

"கடந்த 17ம் தேதி இரவு, 10:00 மணியளவில், காக்கி பேன்ட், நீல நிற டி-ஷர்ட், முகக்கவசம் அணிந்திருந்த மர்ம நபர், எங்கள் வீட்டிற்குள் வந்தார். யாரென கேட்ட போது, தன்னை போலீஸ் எனக் கூறினார். மேலும், நான் விபச்சாரம் செய்து வருவதாகவும், அதனால் பிடிக்க வந்திருப்பதாகவும் கூறினார். 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவதாக கூறினார்.
பணம் பறிப்பு: பிறகு என்னிடம் இருந்த, 50,000 ரூபாயை கொடுத்தேன். மேலும் பணம் வேண்டும் எனக் கேட்டதால், வேறு வழியின்றி என் கணவரிடம் ஏ.டி.எம்., கார்டு கொடுத்து, பணம் எடுத்து வர அனுப்பினேன். என் கணவர் வெளியே சென்ற நேரத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, படுக்கை அறையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
என் கணவர் எடுத்து வந்த, 15,000 ரூபாயை பெற்றுக்கொண்ட மர்ம நபர், தான் மீண்டும் வருவதாகவும், பணம் தர வேண்டும் எனவும் மிரட்டிச் சென்றார். அவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது:
மதுரவாயல்: மதுரவாயல் பகுதியை சேர்ந்த பிரியா, மதுரவாயல் மற்றும் சுற்றியுள்ள மசாஜ் சென்டர்களில் தெரப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி மாலை, இவர் தன்னுடைய கணவருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதுதான், பிரியாவுக்கு பழக்கமான போலீஸ்காரர், மாஸ்க் அணிந்து வீட்டுக்கு வந்திருக்கிறார். பிரியாவின் பெயரை சொல்லியே அழைத்து பேசியிருக்கிறார்..
பிரியாவிடம், "நான் விபசார தடுப்பு பிரிவு போலீஸ்காரர்.. நீங்கள் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக எங்களுக்கு ஆதாரங்களுடன் புகார் வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்..
தெரபி1: அதற்கு பிரியா, "சார் நான் முறையாக தெரப்பிஸ்ட் டிரெயினிங் முடித்து, மசாஜ் சென்டர்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தெரப்பிஸ்ட் பயிற்சியையும் அளித்து வருகிறேன்.. என் மீது இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சொல்றீங்களே" என்று அழுருக்கிறார்.. உடனே அந்த போலீஸ்காரர், "உன்னை அரெஸ்ட் செய்யவே இப்போது வந்திருக்கிறேன், உன்னை கைது செய்யாமல் இருக்க ரூ.1 லட்சம் கொடு" என்று மிரட்டியிருக்கிறார்.
"நாங்கள் இங்கே மரியாதையாக வசித்து வருகிறோம். எங்களை பாலியல் தொழில் செய்ததாக கைது செய்தால், இந்த ஊரில் எப்படி நடமாட முடியும்?" என்று போலீஸ்காரரிடம் பிரியா கெஞ்சியுள்ளனர்... பிறகு, வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை போலீஸ்காரரிடமும் தந்துள்ளார்.. அதை வாங்கிக்கொண்ட போலீஸ்காரர், "ரூ.1 லட்சம் கொடுத்தால்லதான் இங்கிருந்து போவேன், இல்லாவிட்டால் கைதுதான்" என்று கூறியிருக்கிறார்.
ஏடிஎம் பணம்: பிறகு பிரியாவின் கணவர் "என்னுடைய வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் இருக்கிறது. அதை உங்களுக்கு கூகுள்-பே மூலம் அனுப்பி விடவா?" கேட்டிருக்கிறார்.. அதற்கு போலீஸ்காரர், "எனக்கு அப்படியெல்லாம் அனுப்ப கூடாது.. ஏடிஎம்-க்கு போய் பணத்தை எடுத்துவா" என்று தெரிவித்துள்ளார்.
உடனே பிரியாவின் கணவரும் ஏடிஎம்-க்கு கிளம்பி சென்றிருக்கிறார்.. அந்த நேரத்தில் பிரியாவிடம் போலீஸ்காரர், "இப்போது தரும் இந்த ரூ.65 ஆயிரத்தை வாங்கிட்டு போறேன்.. மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை பிறகு வாங்க வேண்டுமானால், என்னுடன் என் ஆசைக்கு இப்போதே இணங்க வேண்டும்" என்று மிரட்டியுள்ளார்.
பலாத்காரம்: அதற்கு பிரியா மறுப்பு தெரிவித்து அழுதும்கூட, அவரை வீட்டின் படுக்கை அறைக்கு தரதரவென இழுத்துச் சென்று, பலாத்காரம் செய்திருக்கிறார்.. இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை விபச்சார வழக்கில் கைது செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனிடையே ஏடிஎம் மையத்திற்கு சென்று திரும்பிய பிரியாவின் கணவரிடம் ரூ.15 ஆயிரத்தை பெற்று கொண்டு, மீதமுள்ள பணத்தை பிறகு வந்து வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு போலீஸ்காரர் சென்றுவிட்டார்.. அப்போது பிரியாவின் முகம் மற்றும் உடலில் சிறு காயங்கள் இருந்ததை பார்த்து பதறிய கணவர், என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.
கண்ணீர் புகார்: நடந்த சம்பவத்தை கூறி பிரியாவும் அழுதுகொண்ட சொல்லவும், அதற்கு பிறகே போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார்... ஆனால், ஏற்கனவே பாலியல் தொழில் செய்வதாக பொய் வழக்கு பதிவு செய்வேன் என்று அந்த போலீஸ்காரர் மிரட்டி சென்றதால், போலீசுக்கு போக பயந்து, குழப்பத்தில் இருந்துள்ளார் அந்த கணவர்.
இதற்கு நடுவில்தான், பணத்தை பெற்று சென்ற போலீஸ்காரர், அடிக்கடி பிரியாவுக்கு போன் செய்து, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டு மிரட்ட துவங்கியிருக்கிறார். இந்த தொல்லை தினமும் அதிகமானதால்தான் புகார் அளித்துள்ளனர்" என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
யாரந்த நபர்: இதையடுத்து பிரியா தந்த புகாரின்படி விசாரணை ஆரம்பமானது.. மதுரவாயல் பகுதியிலுள்ள பிரியா வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போதுதான, வீட்டுக்கு வந்து பிரியாவை மிரட்டியவரை கேமராவில் பார்த்து போலீஸார் அதிர்ந்தனர்.. காரணம், போலீஸ் வட்டாரத்திலேயே ஏற்கனவே பரபரப்புக்கு போன பவுஷா என்ற 28 வயது நபர்தான், பிரியாவை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்த, திருச்சியை சேர்ந்த இளைஞராவார்.
வேலையில் சேர்ந்ததில் இருந்தே லாட்ஜ் மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சென்று மிரட்டி பணம் பறிப்பதே வேலையாக இருந்தவர்.. "பாலியல் தொழில் செய்வதாக உங்கள் மீது புகார் வந்துள்ளது" என்று சொல்லியே லட்சக்கணக்கில் பணம் பறிப்பாராம்.. இதற்கு முன்பு வடபழனி மற்றும் திருவான்மியூர் காவல் நிலையங்களில் வந்த புகார்களில் பவுஷா கைதாகி இருப்பவர்..
அதிரடி கைது: காவல்துறையில் ஒழுங்கினமாக நடந்து கொண்டதால், உயர் அதிகாரிகள் பவுஷாவை சஸ்பெண்ட்டும் செய்திருக்கிறார்கள்.. ஆனாலும், அதே குற்றத்தை தொடர்ந்து செய்துவந்தையடுத்து, தற்போது ஆயுதப்படை காவலர் பவுஷாவை அதிரடியாக மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ்காரர் ஒருவர் கைதாகி இருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications