சர்ப்ரைஸ் ரெய்டு! சென்னையில் திடீரென சோதனையில் இறங்கிய முதல்வர்! கூடவே வந்த "பிரியா".. பளீர் ஆர்டர்!
சென்னை: சென்னையில் வெள்ள நீர் வடிகால் அமைக்கும் இடங்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சென்னை மேயர் பிரியா இந்த ஆய்வின் போது உடன் இருந்தார்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் உரையின் போது சட்டசபையில் தெரிவித்தார். அதேபோல் சென்னையில் வருடா வருடம் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க்கும் வகையியில் இந்த முறை முக்கிய அறிவிப்பு ஒன்றும் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னையில் வெள்ளத்தை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடிகால்
பட்ஜெட்டில் வெள்ள தடுப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. இதற்கான ஒப்பந்த ஆணைகள் அதற்கான நிறுவனங்களிடம் மேயர் பிரியா மூலம் வழங்கப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் பிரியா, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை வேகமாக செய்ய வேண்டும். பருவ மழைக்குள் சென்னையில் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் அமைக்க மட்டும் 176.94 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சென்னையில் ஒரு வருடத்திற்கு உள்ளாக வெள்ள நீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும். அடுத்த மழையில் வெள்ளம் ஏற்படாத வகையில் பணிகள் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். இதற்கு ஏற்றபடி சாலையை தோண்டிவிட்டு புதிய சாலைகள் போடும் பணிகளையும் முதல்வர் முடுக்கிவிட்டு இருந்தார்.

மேயர் பிரியா உத்தரவு
முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை அடுத்து தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. முக்கியமாக கடந்த முறை அதிகமாக வெள்ளம் சேர்ந்த தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. மேலும் , பெரம்பூர், புளியந்தோப்பு, வேப்பேரி ஆகிய பகுதிகளில் புதிய வடிகால் அமைக்கும் பணிகளும், பழைய வடிகால்களை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

நேரில் சோதனை
இந்த நிலையில்தான் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் திரு.வி.க.நகர் பகுதியில் திடீரென இந்த பணிகளை பார்வையிட்டார். அவருடன் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோரும் உடன் இருந்தனர். அங்கிருந்து பின்னர் தேனாம்பேட்டை , வேப்பேரி, புளியந்தோப்பு பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின், மேயர் பிரியாவுடன் ஆய்வு செய்தார்.

பல்வேறு வடிகால்
அங்கு இருக்கும் பல்வேறு சாலைகளில் வடிகால் வசதிகள் எப்படி அமைக்கப்படுகின்றன என்பதை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அமைச்சர் கே என் நேருவும் இந்த ஆய்வின் போது உடன் இருந்தார். வடிகால்களை முறையாக அமையுங்கள். தண்ணீர் உடனே வெளியேறும் வகையில் முறையாக அமைத்திடுங்கள் என்று முதல்வர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications