தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி
சென்னை : 'தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்' நாங்க அத பண்ணுவோம் இத பண்ணுவோம் என்று இன்றைக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்து இன்னைக்கு ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்காங்க... என்று தமிழக வெற்றிக்கழகத்தின் பெயரையே குறிப்பிடாமல் தமிழக அரசை சென்னை மேயர் பிரியா விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு சென்னை மேயர் பிரியா பேசுகையில், இன்றைக்கு அதை செய்வோம்.. இதனை செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்காங்க.. அது யாரு அப்படீன்றது உங்கள் அனைவருக்குமே தெரியும்.. எனக்கு முன்னாடி பேசும் போது பிரபாகரன் அண்ணா கூட சொன்னாங்க.. தற்குறி கூட்டம்.. கவர்ச்சி கூட்டம் என்றார். அது உண்மை தான்.. கவர்ச்சியை வைத்துதானே வெற்றி பெற்றீர்கள்.. வேறு எதனை வைத்து நீங்கள் வெற்றி பெற்றீர்கள்.. வேறு என்ன பீல்டு ஒர்க் நீங்க பண்ணிருக்கீங்க..

இப்போது தான் அவர்கள் முதல்முறையாக ஆட்சிக்கு வந்திருக்காங்க... அவங்க தான் ஆட்சியில் இருக்காங்க.. அவங்க தான் முதலமைச்சராக இருக்காங்க.. அவங்களோட அமைச்சர் தான் துறையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல், இன்றைக்கும் திமுக தான் காரணம்.. திமுக தான் காரணம் என்று சொல்கிறார்கள்.. எந்த ஒரு பொறுப்பை, கடமை உணர்வு அவர்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை.. இத்தனை நாளாகியும் சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ யாருமே பொறுப்பை எடுத்துக் கொள்ள தயாராக இல்லை..
இப்படித்தான் அவர்களின் ஆட்சி இருக்கிறது. நீங்கள் அனைவருமே ஒவ்வொரு நாளுமே தொலைக்காட்சியிலோ அல்லது செய்தியிலோ பார்த்து கொண்டிருப்பீங்க.. நம்ம தலைவர் ஸ்டாலின் முதல்வரான போது..கொரோனாபீக்கில் இருந்தது.. அப்போது பொறுப்பை உணர்ந்து ஸ்டாலின் செயல்பட்டார்.. கொரோனாவின் போது மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
தனது கடமை, பொறுப்புகளை திறம்பட செய்தவர் ஸ்டாலின்.. இன்றைக்கு ஆட்சி அமைத்தவர்கள்.. எல்லாமே அவர்கள் துறை அமைச்சர்கள்.. ஆனால் பொறுப்பு ஏற்க தயாராக இல்லை.. எல்லாவற்றுக்கும் திமுகவே காரணம் என்று பழி போடுகிறார்கள்" இவ்வாறு சென்னை மேயர் பிரியா கூறினார்.












Click it and Unblock the Notifications