களைகட்டிய கிரிக்கெட் போட்டி.. திமுக மகளிர் அணியிடம் தோல்வி அடைந்த சென்னை மேயர் பிரியா அணியினர்!
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையிலான கிரிக்கெட் அணி, திமுக மகளிர் அணியிடம் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 14 ஆம் தேதி இந்த கிரிக்கெட் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.

இந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் ஒரு அணியும், மகளிர் தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச் சூழல் அணிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு அணிகளாக களமிறங்கினர். இந்த முதலமைச்சர் பிறந்தநாள் சிறப்பு கிரிக்கெட் போட்டிக்காக சென்னை மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.
மொத்தமாக 4 மகளிர் அணிகளும், 16 ஆடவர் அணிகளும் என 20 அணிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் திமுக மகளிர் அணி - மேயர் பிரியா தலைமையிலான அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை மேயர் பிரியா தலைமையிலான அணி தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளைச் சேர்ந்தவர்களுக்கு திமுக எம்.பி தயாநிதி மாறன் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ஒரு லட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய், மேன் ஆப்தி மேட்ச், மேன் ஆப்தி சீரிஸ் என்று பல பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அதே போல மகளிர் அணியில் 4 அணிகள் போட்டியிடுகின்றன. அதில் முதல் இடத்தை பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மற்றும் ஸ்கூட்டி என்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications