சென்னையின் மேஜர் பிரச்சினைக்கு வேற லெவல் திட்டம்! களத்தில் இறங்கிய மேயர் பிரியா.. அதிரடி உத்தரவு
சென்னை: தலைநகர் சென்னையில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றைத் தீர்க்கும் முனைப்பில் நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. இது குறித்து மேயர் பிரியா முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
தலைநகர் சென்னை இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரச்சினை தான். அதேநேரம் மற்றொரு பிரச்சினையும் இதனால் ஏற்படுகிறது. அதுதான் பார்கிங் இடப்பாற்றாக்குறை. அதைத் தீர்க்கும் நடவடிக்கையிலும் சென்னை நகராட்சி இறங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி: இதற்கிடையே அனைத்து மண்டலங்களிலும் மேம்படுத்தப்பட்ட பார்கிங் மேலாண்மை அமைப்பைத் தொடங்க இப்போது சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.. இது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மேயர் பிரியா நேற்று நடத்தினார். அப்போது அவர் சென்னை நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து சேதமடைந்த வாகனங்களையும் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அனைத்து வாகன நிறுத்துமிடங்களையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரவும் ரொக்கமில்லா பரிவர்த்தனையைக் கொண்டு வரவும் அவர் உத்தரவிட்டார்.. நகரின் அனைத்து சாலைகளிலும் மேம்படுத்தப்பட்ட பார்கிங் அமைப்பைக் கொண்டு வரச் சென்னை மாநகராட்சி விரைவில் டெண்டர்களை வெளியிடவுள்ளது. தற்போது இருக்கும் ஒப்பந்தம் அக்டோபர் 2023இல் முடியும் நிலையில், அடுத்த டெண்டரில் பல புதிய அம்சங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
ஆலோசனை: இது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மேயர் பிரியா நேற்று வியாழக்கிழமை நடத்தினார். அதில் பார்கிங் அமைப்பை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் சென்னை மாநகர கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். இதில் சென்னை நகரில் பார்கிங் வசதியை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இப்போது பார்த்தோம் என்றால் சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட பல்வேறு இடங்களில் 5,000 பார்கிங் ஸ்லாட்கள் தனியார் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இப்போது சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் 12,000 பார்கிங் இடங்களை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது.
நடவடிக்கை: ஒப்பீட்டளவில் சென்னையில் பார்கிங் தேவை குறைந்துள்ளது. நகரில் பயணிக்கும் கார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே இதைக் காட்டுகிறது. சென்னையில் மெட்ரோ போன்ற உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாகவே பார்கிங் சேவை கணிசமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், வரும் காலத்தில் பார்கிங் தேவை அதிகரிக்கவே செய்யும் என்பதால் நகரின் பார்கிங் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையில் இப்போது சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டார். முதற்கட்டமாகச் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை அகற்றும் பணிகளில் மாநகராட்சி இறங்க உள்ளது. பார்கிங் இடங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்கு என்று தனியாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வேற லெவல் திட்டம்: இப்போது பார்கிங் வசதி ஒவ்வொரு இடத்திலும் தனித்து இயங்கும் நிலையில், அனைத்து பார்கிங் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, எல்லா இடங்களிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனையைக் கொண்டுவர நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பான இறுதி முடிவு வரும் அக்டோபர் மாதம் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், சென்னை நகரில் அதிகரிக்கும் நெரிசலைக் கருத்தில் கொண்டு பார்கிங்கிற்கு என்று மட்டும் தனியாக பார்கிங் கொள்கை வகுக்கவும் சென்னை நகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications