“பிளீச்சிங் பவுடர் இல்லாம பாண்ட்ஸ் பவுடரா?” புகாருக்கு கிண்டலாக பதில் சொன்ன சென்னை மேயர் பிரியா!
சென்னை: சென்னையின் சில பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு, கோலமாவு தெளிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் மேயர் பிரியாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு சென்னை மேயர் பிரியா, "பிளீச்சிங் பவுடர் இல்லாமல் பாண்ட்ஸ் பவுடரா இது?" எனக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் மழுப்பலாக பதில் அளித்ததோடு, கேமராவை ஆஃப் செய்யுமாறு மேயர் பிரியா கூறியதால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'அன்னம் தரும் அமுதக் கரங்கள்' என்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் கலந்து கொள்ளாத நிலையில், சென்னை மேயர் பிரியா ராஜன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு, கோலமாவு தெளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, அந்த நிகழ்ச்சிக்கு வந்த சென்னை மேயர் பிரியாவிடம் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்கள் சிலர் சென்னை மேயர் பிரியாவிடம் அந்த பவுடரை காண்பித்தனர். இது பிளீச்சிங் பவுடரா என பார்த்து சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினர். அதனை முகர்ந்து பார்த்த மேயர் பிரியா, ப்ளீச்சிங் பவுடர் வாசனை வருது.. இது பிளீச்சிங் பவுடர்தான் என்று கூறினார்.
அப்போது பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பை தெளித்ததாகவும் பிளீச்சிங் பவுடர் வாசனையே இல்லை என்றும் மேயரிடம் சிலர் குற்றம்சாட்டினர். அதற்கு மேயர் பிரியா, தமிழக அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் பிளீச்சிங் பவுடரை தான் சென்னை மாநகராட்சி பகுதிகளில் பயன்படுத்துகிறோம் . மேலும் இதில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டது உள்ளதா என்பது குறித்தும், பிளீச்சிங் பவுடரின் தரம் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று சிரித்து கொண்டே தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கடுப்பான மேயர் பிரியா, "பிளீச்சிங் பவுடர் இல்லாம பாண்ட்ஸ் பவுடரா இது?" என்று சிரித்தபடியே கூறினார். மேலும், "யார் நீங்க?" என்று கேள்வி எழுப்பி கேமராவை ஆப் செய்யுமாறு சொன்னார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications