எல்லாமே ஒரு கோரிக்கை.. சென்னை மேயர் பிரியாவை அதிர வைத்த அடையாறு மக்கள்.. உடனே நடந்த ஆக்ஷன்
சென்னை: சென்னை அடையாறில் மக்களை தேடி மேயர் திட்ட முகாமில் மேயர் பிரியா கலந்து கொண்டார். அப்போது கொடுக்கப்பட்ட மனுக்கள் எல்லாமே ஒரே மாதிரியான கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கைகளில் 14 கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுத்தார்.
சென்னை மாநகராட்சி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், "மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட எல்.பி. சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் ஆர்.பிரியா மண்டலம்-13க்குட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-13க்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்து வரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படியே மக்களை தேடி மேயர் திட்டத்தின் கீழ், அடையாறு தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் ஜூலை 5ம் தேதியான நேற்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாமில் மொத்தம் 303 பேர் தங்கள் கோரிக்கையை மனுக்களாக அளித்தனர். இதில், 14 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
இந்த முகாமில் முதல்-அமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் 10 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் காசோலைகளும், 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் 5 மகளிருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 479 மதிப்பிலான தையல் எந்திரங்களை மேயர் பிரியா வழங்கினார். அதுமட்டுமின்றி,, அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 21 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கினார். மேலும், 8 பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் மேயர் பிரியா வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர் பிரியா, "பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளார்கள், அந்தந்த துறைகளுடன் இணைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மண்டலம் 5-ல் நடந்த மக்களை தேடி மேயர் முகாமில் 333 புகார்கள் பெறப்பட்டு 331 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்டலம் 6-ல் நடைபெற்ற மக்களை தேடி மேயர் முகாமில் 241 புகார்கள் பெறப்பட்டு, இதில் 160 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அடையாறில் நடந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களை தேடி மேயர் திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றே பலரும் கோரிக்கை வைத்தார்கள் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடர்பாகவும் பெரும்பாலான புகார்கள் கிடைத்தது. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மழைநீர் வடிகால் பணிகள் சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளதோ அந்த இடங்களில் உடனடியாக சாலை பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்" இவ்வாறு மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.
அடையாறில் நேற்று நடந்த மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications