சென்னை மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொரோனா?.. மருத்துவ விடுப்பில் சென்றதால் பரபரப்பு
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவற்றில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அதிகளவில் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருந்தவர் ஜெயந்தி. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு டீனாக இருந்த இவர் தலைமையில் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
அது போல் இவர் தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. சிகிச்சை ஒரு புறமிருந்தாலும் இந்த உணவால் ஏராளமானோர் கொரோனாவில் இருந்து குணமடைவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் என 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தொற்று உறுதி
அது டீன் ஜெயந்திக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை.

நியமனம்
இதையடுத்து கடந்த 12-ஆம் தேதி ஜெயந்தி மருத்துவ விடுப்பில் செல்வதாக தொலைபேசி மூலம் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் ஜெயந்திக்கு பதிலாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் புதிய டீனாக கல்லீரல் நிபுணர் மற்றும் பேராசிரியருமான மருத்துவர் நாராயணசாமியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

டீன் மருத்துவ விடுப்பு
இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது டீனும் கொரோனா பாதிப்பால் மருத்துவ விடுப்பில் சென்றதாக கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது அதிமுக எம்எல்ஏ பழனிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications