அடுத்த மெட்ரோ ரயில் ரூட் இதுதான்.. மீனம்பாக்கம் - பரந்தூர் விமான நிலையம்.. வேலையை தொடங்கிய CMRL
சென்னை: மீனம்பாக்கத்தில் இருந்து குரோம்பேட்டை, குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது.
சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் தற்போது 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் என்பதால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தற்போது, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், உயர்மட்ட பாதை பணி, தூண்கள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கலங்கரை விளக்கம், அடையாறு, சேத்துப்பட்டு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் சுரங்கம் தோண்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளன.
இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மீனம்பாக்கம் முதல் பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை மொத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு செல்லும் வகையில் இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் என்ற அடிப்படையில் மெட்ரோ வழித்தடம் உருவாக்கப்படும் நிலையில், இந்த புதிய வழித்தடத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
மீனம்பாக்கத்தில் இருந்து குரோம்பேட்டை, குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைகிறது. புதிய வழித்தடத்துக்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications