சூறாவளி வருதாமே.. மீனவர்களுக்கு அவசர அலர்ட்! 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை நிலவரம் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

Chennai MET alert fisherman due to hurricane and said possibility of rain in Tamilnadu

கடந்த 24 மணி நேரத்தில், உதகமண்டலம் (நீலகிரி) 7, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 5, கெட்டி (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 4, மோகனூர் (நாமக்கல்), வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சேலம், நாமக்கல், திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), கல்லக்குடி (திருச்சி), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 3, உசிலம்பட்டி (மதுரை), கீரனூர் (புதுக்கோட்டை), பாடலூர் (பெரம்பலூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), தாத்தையங்கார்பேட்டை (திருச்சி), சங்கரிதுர்க்கம் (சேலம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), முசிறி (திருச்சி), துவாக்குடி (திருச்சி), குளித்தலை (கரூர்), மைலம்பட்டி (கரூர்), கிருஷ்ணகிரி, வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 2, பாலவிதிதி (கரூர்), நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ராமநாதபுரம், சோலையார் (கோயம்புத்தூர்), சந்தியூர் Kvk AWS (சேலம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), தேவாலா (நீலகிரி), ஹரிசன் எஸ்டேட் (நீலகிரி), வல்லம் (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), குந்தா பாலம் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), கொடுமுடி (ஈரோடு), தண்டாரம்பேட்டை (திருவண்ணாமலை), தாளவாடி (ஈரோடு), தம்மம்பட்டி (சேலம்), TNAU ஏத்தாப்பூர் (சேலம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 1 சென்டிமீட்டரில் அளவில் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆந்திர கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Chennai MET alert fisherman due to hurricane and said possibility of rain in Tamilnadu

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்ளில் இன்று முதல் 26 ஆம் தேதி வரை வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+