தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை மையம்
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தேனி திண்டுக்கல்லில் மழை
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ராமநாதபுரம் , தூத்துக்குடி , நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் , மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சை திருவாரூரில் மழை
9ஆம் தேதி நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

திருச்சி கரூரில் மழை
அதேபோல் 10ஆம் தேதி நாளை மறுதினம் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், தஞ்சாவூ,ர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை மற்றும் புதுச்சேரியில் கனமழையும், மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

சிவகங்கை ராமநாதபுரத்தில் மழை
11ஆம் தேதி திங்கட்கிழமை பொறுத்தவரையில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புற நகரங்களில் வானம் இரண்டு நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நத்தத்தில் அதிக மழை
நேற்று காலை எட்டு முப்பது மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழை 13 மாவட்டங்களில் கனமழை பெய்து இருக்கிறது. அதிகபட்சமாக மே மாத்தூர் மற்றும் நத்தத்தில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ரிஷிவந்தியம் 10 சென்டிமீட்டர், வேப்பூர் 18 சென்டிமீட்டர், கடையநல்லூர் 16 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை
இதனிடையே தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications