9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமாம்... லிஸ்ட்டில் சென்னை மிஸ்ஸிங்!- சென்னை வானிலை மையம்
Recommended Video
சென்னை: வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த மே 4 -ஆம் தேதி தொடங்கியது. இதனால் சென்னை, வேலூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் வெப்பம் கொளுத்தி வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் கெங்கவல்லி, வீரகணூரில் தலா 5 செ.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீட்டரும், கடலூர் மாவட்டம் வேப்பூர், லக்கூர், ஊட்டி ஆகிய இடங்களில் 3 செ.மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், ஊத்தங்கரை, கரூர் மாவட்டம் பஞ்சபட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று வெப்பசலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மைய அதிகாரிகள் கூறுகையில் தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
மழை பெய்யும் போது மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம். ஒரு சில இடங்களில் அனல்காற்று வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications