வெளுக்க போகுது கனமழை.. இந்த 7 மாவட்ட மக்களுக்குக் குஷி தான்.. வானிலை மையத்தின் சூப்பர் தகவல்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் காரணமாகத் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்தியாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டதை போல வரும் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பெய்து வரும் நல்ல பருவமழை காரணமாக மாநிலத்திலுள்ள முக்கிய நீர் ஆதாரங்கள் நிரம்பியுள்ளன. சென்னையின் நீர் ஆதாரமாக உள்ள வீராணம், புழல் உட்பட அனைத்து முக்கிய ஏரிகளும் நிரம்பியுள்ளன.

9 மாவட்டங்களில் கனமழை
இந்நிலையில் தேனி, திண்டுக்கல் உட்பட ஏழு மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குலாப் புயல் காலை நிலவரப்படி கோபால்பூருக்கு தென் கிழக்கே 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் இந்த புயல் இன்று நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவக் காற்று காரணமாகத் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், ஏனை மேற்கு தொடர்ச்சி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

தொடரும் கனமழை
அதேபோல நாளை ( செப். 27 ) தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிகக் கன மழையும் தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. செப் 28ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். வரும் செப்.29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை
தலைநகர் சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மரக்காணம் பகுதியில் 130 மிமி நெய்வேலியில் 80 மிமி மழையும் பெய்துள்ளது.

தாழ்வுப்
குலாப் புயல் இன்று நள்ளிரவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications