வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுமாம்.. என்ன புண்ணியம்?.. பள்ளிகளுக்கு லீவு இருக்காதே!
சென்னை: வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் வடக்கு கேரள கரை வரை நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெய்யக் கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியது.

தாழ்வுப் பகுதி
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று அதே பகுதியில் வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

ஓரிரு இடங்களில் மழை
லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், கிழக்கு திசைக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மழைக்கான வாய்ப்பு
அதே போல் தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், அதன் பின்னரே தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு குறித்து கூற முடியும் என்று விளக்கமளித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications