20 மாவட்டங்களுக்கு! அடுத்த 3 மணிநேரத்திற்கு.. மேக கூட்டங்கள் டென்ட்! உங்கள் ஊரில் மழை வருமா பாருங்க?
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காலை முதல் கோடைவெப்பம் தாளித்து எடுத்து வந்தது. தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் எந்த நேரமும் ஏசி போட்டுக் கொண்டு உட்கார வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இதனால் கரன்ட் பில் எத்தனை ஆயிரம் வருமோ என்ற எண்ணவோட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இன்றும் நாளையும் சென்னையில் 40 டிகிரி அல்லது 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பால் மக்கள் வெளியே போகவே அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து மதியம் நேரத்தில் திடீரென மழை பெய்து பூமியை குளிர்வித்தது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கப்பெருமாள்கோயில், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை நகர்ப்பகுதி முழுவதும் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மழை முடிந்ததும் ஒதுங்கியிருந்த இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் புறப்படத் தொடங்கியதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications