வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்.. சென்னையில் மழை எப்படி.. வானிலை மையம் அறிவிப்பு
Recommended Video
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்துக்கு மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் உள்ளது.

அரபிக் கடலில் கியார் என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் கூறுகையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி உள்ளது.
தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
சூறைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications