தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மிதமான மழை.. சென்னை வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக - வடஇலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

 புதுவை மற்றும் காரைக்கால்

புதுவை மற்றும் காரைக்கால்

11.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

12.04.2022, 13.04.2022, 14.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

 கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

வத்திராயிருப்பு (விருதுநகர்) 12, கூடலூர் (தேனி) 10, பேரையூர் (மதுரை), மீமிசல் (புதுக்கோட்டை), வைகை அணை (தேனி) தலா 6, குறிஞ்சிப்பாடி (கடலூர்), பிலவாக்கல் (விருதுநகர்), சோழவந்தான் (மதுரை), பெரியகுளம் (தேனி ), ஆய்க்குடி (தென்காசி ), தேக்கடி (தேனி ) தலா 5, விருதுநகர் (விருதுநகர் ), கோவிலங்குளம் (விருதுநகர் ), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் ), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் ), ராஜபாளையம் (விருதுநகர் ), அரிமளம் (புதுக்கோட்டை ) , நாகர்கோவில் ( (கன்னியாகுமரி) தலா 4, மோகனூர் (நாமக்கல் ), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை ), சேத்தியாத்தோப்பு (கடலூர் ), வாடிப்பட்டி (மதுரை ), வீரபாண்டி (தேனி ), வானூர் (விழுப்புரம் ), நிலக்கோட்டை (திண்டுக்கல் ), உத்தமபாளையம் (தேனி ), சோலையார் (கோயம்புத்தூர் ), சிவகிரி (தென்காசி ), இரணியல் (கன்னியாகுமரி ) , மதுக்கூர் (தஞ்சாவூர் ), தென்காசி (தென்காசி ), திருமங்கலம் (மதுரை ), ஜெயம்கொண்டம் (அரியலூர் ), போடிநாயக்கனூர் (தேனி ), ஆண்டிப்பட்டி (தேனி ) தலா 3 சென்டிமீட்டர்

 மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

10.04.2022, 11.04.2022: தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 காற்று வீசும்

காற்று வீசும்

10.04.2022, 11.04.2022: தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+