சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள்.. இன்னும் கொஞ்ச நாள் தான்.. முழுவீச்சில் தயாராகும் பணிகள்
சென்னை: சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் விரைவில் வரவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கான மின்மயமாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் செயல்படத் தொடங்கின. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ வழித்தடத்துக்கான மின்மயமாக்கல் பணிகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த வழித்தடத்தில் தான் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் வரவுள்ளது.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலுக்கான ஆயத்தப் பணிகளில், மேல்நிலை உபகரணங்களுக்கான சப்போர்ட்டுக்காக மாஸ்ட்கள் நிறுவப்படுகின்றன. இவை, மெட்ரோ ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித் தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித் தடத்தில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித் தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பகுதியில் தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த 3 வழித் தடங்களில் பணிகள் முடிந்த பின், 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களையும், இரண்டாம் கட்டமாக 36 மெட்ரோ ரயில்களையும் தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன்படி, முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இப்பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் இயக்குவதற்காக, ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் வரும் ஆகஸ்ட்டில் சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெறும்.
ஆரம்பத்தில், கண்காணிப்பாளர்கள் உதவியுடன் டிரைவர் இல்லாத இந்த மெட்ரோ ரயில்கள் இயங்கும். டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சரியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பார்கள். அதைத் தொடர்ந்து, 138 மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 16 கி.மீ தொலைவுக்கு இரண்டாம் கட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications