சென்னை ஆழ்வார்திருநகர் முதல் ஆலப்பாக்கம் வரை.. மொத்தமா மாற போகுது.. இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை
சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்டுமானம் இப்போது நகரில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் சுமார் 4 கிமீ தூரத்திற்கு ஒரே பாதையில் வழித்தடம் 4 மற்றும் 5 மெட்ரோ ரூட்கள் அமைகிறது. இதற்காக நாட்டிலேயே முதல்முறையாக இரட்டை அடுக்கு மெட்ரோ பாதையைக் கட்டி வருகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் ஏற்கனவே இப்போது 2 ரூட்களில் மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதற்கிடையே சென்னை மெட்ரோவின் 2ம் கட்டுமானம் இப்போது நடந்து வருகிறது நிலையில், மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரை வழித்தடம் 3, பூந்தமல்லி- ஆயிரம் விளக்கு வரை வழித்தடம் 4, மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை வழித்தடம் 5 என மூன்று ரூட்களில் கட்டுமானம் நடந்து வருகிறது.
மெட்ரோ: இதில் 3.75 கிமீ தொலைவுக்கு ஆழ்வார்திருநகர் முதல் ஆலப்பாக்கம் வரையிலான தூரத்திற்கு வழித்தடம் 4 மற்றும் 5 ஒரே ரூட்டில் பயணிப்பதால் அங்கு இரட்டை மெட்ரோ பாதை அமைகிறது. அதாவது இந்த இரட்டை அடுக்கு மெட்ரோவில் மேலே ஒரு ரூட்டிலும் கீழே மற்றொரு ரூட்டிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.
இரட்டை அடுக்கு பாதை: ஆரம்பத்தில் இந்த இரட்டை அடுக்கு மெட்ரோ கட்டுமானத்தில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்ட போதிலும் இப்போது அலை வேகமெடுத்துள்ளன. இந்த பகுதியில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.
நமது நாட்டில் இதுபோன்ற இரட்டை மெட்ரோ பாதை அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த இரட்டை மெட்ரோ பாதையில் ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய 4 மெட்ரோ நிலையங்கள் அமைகிறது. இந்த 4 ஸ்டேஷந்களிலும் டிக்கெட் எடுக்க ஒரே பகுதி இருக்கும். ஆனால், மெட்ரோ நிலையம் மட்டும் இரு வேறு அடுக்குகளில் அமைகிறது. இதற்கான கட்டுமானத்தை எல்&டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதிகாரிகள் சொல்வது என்ன: இது தொடர்பாக மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "வடிவமைப்பு, இடப்பற்றாக்குறை ஆகியவை காரணமாக இந்த இரட்டை அடுக்கு கட்டுமானம் மிகவும் சவாலாக இருந்தது. மேலும், இந்த பாதையில் நிலமும் ஸ்திரத்தன்மையுடன் இல்லை. இதனால் கட்டுமானம் சவாலாக இருந்தது.
வழித்தடம் 4 மற்றும் 5 பகுதி 110இல் இணைகிறது. அங்குத் தொடங்கி 242 வரை இதுபோல இரட்டை பாதை தான் அமைகிறது. அதாவது இந்த இடைப்பட்ட தூரத்தில் 192 தூண்கள் அமைகிறது. முதலில் இப்போது தூண்களைக் கட்டும் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
சிக்கல்: அதேநேரம் இந்த ரூட்டில் சாலை மிகவும் குறுகலானது.. எனவே, தூண்களில் திருப்பத்தை ஏற்படுத்த கிரேன்களை பயன்படுத்த முடியவில்லை. எனவே, ஆலப்பாக்கத்தில் திருப்பத்தை அமைக்க லான்சிங் கர்டரை பயன்படுத்தி உள்ளனர். சுமார் 52 பாலங்களில் இந்த திருப்பம் அமைகிறது. அங்கு கிரேன் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சாலை குறுகலாக இருப்பதால் இந்த லான்சிங் கர்டரை சாதனத்தைப் பயன்படுத்தித் திருப்பத்தை அமைத்துள்ளனர்.
சென்னை முழுக்க இந்த 2ம் கட்ட மெட்ரோ கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது. இவை 2026 முதல் படிப்படியாகச் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications