இதுதான் சென்னை மெட்ரோ.. ஒரு சின்ன மாற்றம்தான் ஆனால் பெரிய புரட்சி.. குஷியில் மக்கள்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை மெட்ரோவில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. மக்கள் இடையே இந்த மாற்றம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சென்னை மெட்ரோவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.

இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ மாற்றம்: இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும்.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
புரட்சி: சென்னை மெட்ரோவில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. மக்கள் இடையே இந்த மாற்றம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கண் பார்வை குறைவுடையோர் வசதிக்காக மெட்ரோ இரயில் நிலைய நுழைவாயிலில் இருந்து நடைமேடை வரை, தொட்டு உணர்வு நடைபாதை நிறுவப்பட்டுள்ளன. அதாவது தடைகள் இல்லாத நடைபயணம் அமைக்கப்பட்டு உள்ளது. அதோடு பிரெய்லி முறையில் உதவும் டைல்ஸ் அமைக்கப்பட்டு உள்ளது.
டைல்ஸ் புள்ளிகள் மற்றும் கோடுகள் உடன் அமைக்கப்பட்டு உள்ளன. மேடுகள், கட்டு கட்டாக பாக்ஸ்கள் கொண்ட டைல்ஸ்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கண்பார்வையற்ற மக்கள் எளிதாக இந்த பாதையில் பயணம் செய்ய முடியும். எளிதாக அங்கும், இங்கும் செல்ல முடியும். சென்னை மெட்ரோவில் செய்யப்பட்டு இருக்கும் இந்த மாற்றம் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. மக்கள் இடையே இந்த மாற்றம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
களமிறங்கும் இரும்பு மனிதன்: சென்னையில் மெட்ரோ 2 திட்டத்தின் கீழ் மிக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டம் திறக்கப்படும்போது, கட்டிடங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு மேலே வெவ்வேறு இடங்களில் 63 இரும்பு பாலங்கள் நிறுவப்படும். இந்த பாலங்களில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயிலின் 1ம் கட்டத்தில் ஒரே ஒரு இரும்பு பாலம் இருந்த போது இந்த முறை 63 இரும்பு பாலம் கொண்டு வரப்பட உள்ளது.
செங்குத்து பாலம் கட்டுவதற்கு அனுமதி குறைவாக உள்ள இடங்களில் நீண்ட நீளத்திற்கு எஃகு கர்டர்கள் நிறுவப்படும் மற்றும் கீழே உள்ள கட்டமைப்புகள், சாலைகள் அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகள் இருப்பதால் தூண்களுடன் கான்கிரீட் வையாடக்ட்களை உருவாக்க முடியாது. இதனால் பாலம் அமைக்காமல் இரும்பு பாலம் அமைக்கப்படும்.
சமீபத்தில், போரூரில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரையிலான கட்டம்-2 கட்டுமானத்தின் ஒரு பகுதியாக, போரூர் அருகே உள்ள மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னை பைபாஸ் மேம்பாலத்தின் மேல் 222 டன் எடையுள்ள 40 மீட்டர் நீளமுள்ள இரும்பு கர்டர் பாலத்தை தொழிலாளர்கள் நிறுவினர். அதேபோல் இனி சென்னை முழுக்க இரும்பு பாலங்கள் நிறுவப்படும்.
சென்னை புறவழிச்சாலை, தெள்ளியரகரம், பூந்தமல்லி சந்திப்பு, போரூர் சந்திப்பு, வளசரவாக்கம், ஆதம்பாக்கம், ராமாபுரம் சந்திப்பு, கத்திப்பாரா, கல்லியம்மன் கோயில் தெரு, பட் ரோடு, ஈச்சங்காடு, பெரும்பாக்கம், மேடவாக்கம், ரெட்டேரி, எம்.எம்.பி.டி., உள்ளிட்ட இடங்களில் 63 மெட்டல் கர்டர்கள் அமைக்கப்படும். கோயம்பேடு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications