சென்னை மெட்ரோவில் செல்லும் பெண்களுக்கு.. முக்கிய அறிவிப்பு.. மெட்ரோ லிமிடெட் வெளியிட்ட புது வசதி
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) முதன்முறையாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பிரத்யேக ஹெல்ப்லைனைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
CMRL சார்பாக நான்கு இலக்க ஹெல்ப்லைன் எண்ணை உருவாக்க உள்ளனர். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகிய இரண்டிற்கும் இது தொடர்பாக சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, CMRL ஏற்கனவே 186042 51515 என்ற பொது உதவி எண்ணைக் கொண்டுள்ளது, இது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து செயல்பட்டு வருகிறது. பெண்கள் பயணிகளின் பரிந்துரையின் பேரில் தற்போது அவர்களுக்கு என்று தனி பாதுகாப்பு செயல்படுத்த முடிவு செய்தோம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹெல்ப் லைன்: ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2023 க்கு இடையில் பெண்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கணக்கெடுப்பில், பெரும்பாலான பெண்கள் மெட்ரோ அமைப்பில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக உணர்ந்ததாகவும், ஆனால் சில குறைபாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை குறிப்பிட்டும் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் தற்போது ஹெல்ப் லைன் கொண்டு வர உள்ளோம். விரைவில் எண் கிடைக்கும் என நம்புகிறோம். இது அதிகமான பெண் பயணிகளை இந்த மெட்ரோவை பயன்படுத்த ஊக்குவிக்கும். நகரின் மெட்ரோ ரயில் ரயில்கள் மற்றும் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கணக்கெடுப்பு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் செய்யப்பட்டது, கிட்டத்தட்ட 12,000 பெண்கள் பங்கேற்றனர்.
சிறிய ஹெல்ப் லைன்: இதன் அடிப்படையில் தற்போது ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கையில், "எங்களுக்கு எண் வழங்கப்பட்டவுடன், அது மெட்ரோ முழுவதும் காட்டப்படும் - ஸ்டேஷன் பகுதிகள், ரயில்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் ஆகியவற்றை காட்ட முடியும். இதனால் பெண்கள் சிக்கலை எதிர்கொண்டால் விரைவாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
ஏற்கனவே பொதுவான எண் இருந்தாலும். பழைய ஹெல்ப்லைனில் பதினொரு இலக்கங்கள் உள்ளன, அதேசமயம் இந்த புதிய ஹெல்ப் லைன் நான்கு இலக்க எண்ணாக இருக்கும். இதனால் பெண்கள் டயல் செய்வது எளிதாக இருக்கும். அவசர காலத்தில் பெண்கள் டயல் செய்வது எளிதாக இருக்கும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2ம் கட்ட மெட்ரோ: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் (கோயம்பேடு முதல் ஆவடி வரை) மற்றும் வழித்தடம் 3-ல் (சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை) மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மற்றும் வழித்தடம் 3-ல் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான .மு.அ.சித்திக், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (20.09.2023) சமர்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

வழித்தடம் 5-ல் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான கட்டம் 2-இன் நீட்டிப்பு: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. நீளத்திற்கு தோராயமாக 15 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் ரூ.6376.18 கோடி மதிப்பீட்டில் (தோராயமாக) மெட்ரோ இரயிலை நீட்டிபதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிக்கப்பட்டு மெட்ரோ இரயிலை பரிந்துரைக்கிறது.
தகவல் தொழில்நுட்பப் பூங்கா, நில இருப்பு மற்றும் பட்டாபிராமத்தில் எதிர்கால வளர்ச்சி சாத்தியம் போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஆவடி முதல் பட்டாபிராம் வரையிலான விரிவாக்கத்தை விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் ஆராயலாம் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த மெட்ரோ இரயில் நிலையங்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications