சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மேஜர் மாற்றம்.. செப்.9 முதல் ரயில்கள் குறைப்பு.. பயணிகள் இதை கவனிங்க!
சென்னை: வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில் மட்டும் ரயில் சேவை இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் குறைவான அளவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழிதடமாகிய இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதாவது சென்னை பரங்கிமலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும், மீனம்பாக்கத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலும் 2 வழித்தடங்களாக இயக்கப்படுகிறது. தினசரி 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் வசதிக்காக புதிய புதிய திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான இரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம். பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ இரயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:
- பராமரிப்பு பணி காலம்: 09.09.2025 முதல் 19.10.2025 வரை.
- நேரம்: காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை.
இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:
- மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
- காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும் இன்றி இயங்கும்.
- இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது.
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உதவிமையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லதுhttp://chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications