ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்.. விரைவில் சென்னையில் சீறிப்பாய்கிறது.. ரூ.946.92 கோடியில் ஒப்பந்தம்!
சென்னை: சென்னையில் விரைவில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.946.92 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்கள் (மொத்தம் 78 பெட்டிகள்) தயாரிக்கப்பட உள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை மாநகரில் மக்கள் அதிகமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும், கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விரிவாக்கம் செய்ய கோரிக்கை
இந்த மெட்ரோ ரயில்களில் தற்போது வார நாட்களில் தினமும் 2.15 லட்சம் முதல் 2.20 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் மழைக்காலங்களில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை என்பது சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை விரைவுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2ம் கட்ட மெட்ரோ பணி
அந்த வகையில் தான் தற்போது சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரூ.63 ஆயிரத்து 245 கோடி மதிப்பீட்டில் இந்த பணி நடைபெற உள்ளது. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோமீட்டர், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோமீட்டர் தொலைவு, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 47 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சுரங்கபாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்
இந்நிலையில் தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும், திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ரூ.946.92 கோடி ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் சித்திக் முன்னிலையில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி(அமைப்புகள் மற்றும் இயக்கம்), திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவன வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரூ.946.92 கோடி மதிப்பு கொண்டது.

ஒப்பந்தத்தின் அம்சம்
இந்த ஒப்பந்ததின்படி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தின் கீழ் ஓட்டுனர் இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்கள் (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம் தான் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது ரயில் பெட்டி வடிவமைப்பு, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குவதற்கான தகுதி, பணியாளர் பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றுமு் குறைபாடு பொறப்பு உள்பட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு உள்ளது.

2024ல் முதல் ரயில்
இந்த ஒப்பந்தத்தின் படி ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் 2024ல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு 2024 நவம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை பல்வேறு கட்டமாக மெட்ரோ ரயில்கள் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் மக்கள் பயன்பாட்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.. மத்திய அரசு செய்வது சதி.. ப சிதம்பரம் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications