கோயம்பேடு மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே.. வரப்போகுது சூப்பர் சம்பவம்.. மெட்ரோ மாஸ் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் கோயம்பேடு மெட்ரோ அருகே உள்ள பல நில பகுதிகளில் முக்கியமான புதிய பல கட்டுமானங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள், திட்டங்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கான ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட் அருகே இந்த கட்டுமானங்கள் வர உள்ளன.

Chennai Metro Rail Ltd has called for bid for preparing Feasibility Reportsfor many Land Parcels near Koyambedu

சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய நிலையங்கள்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

கோயம்பேடு: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் கோயம்பேடு மெட்ரோ அருகே உள்ள பல நில பகுதிகளில் முக்கியமான புதிய பல கட்டுமானங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள், திட்டங்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கான ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட் அருகே இந்த கட்டுமானங்கள் வர உள்ளன.

மெட்ரோ மூலம் கட்டப்பட்டும் இந்த கட்டிடங்கள் அலுவலகம் அல்லது சில்லறை வர்த்தக இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களாகப் பயன்படுத்தப்படும். கட்டம் I திட்டத்தில் சில நிலையங்களில் கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்கான சிறிய இடங்களை CMRL ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CRML) வருவாயை அதிகரிக்க நிலையங்களுக்கு அருகில் கட்டிடங்களை கட்டி அலுவலகம் அல்லது சில்லறை இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது.

சிஎம்ஆர்எல் அதிகாரிகளின் கூற்றுப்படி, 54 கிமீ மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை தினசரி 2.97 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், டிக்கெட் கட்டணத்தை மட்டுமே நம்பாமல் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது முக்கியம்.

கட்டம் I திட்டத்தில் சில நிலையங்களில் கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்கான சிறிய இடங்களை CMRL ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகம் இப்போது பல மாடிக் கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட விரும்புகிறார்கள். அரும்பாக்கம், நேரு பூங்கா, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரு பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில், 5,264 சதுர மீட்டர் பரப்பளவில், ஒன்பது தளங்கள் கொண்ட கோபுரம் கட்டப்படும். இந்த இடங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஏலத்தை முன்வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இது பெரும்பாலும் அலுவலகங்களாகப் பயன்படுத்தப்படும். சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், இரண்டு மாடி கட்டடம் கட்ட திட்டமிட்டு, அதை வணிக வளாகமாக, இயற்கையான சூழ்நிலையில் மற்றும் தோட்டக்கலைப் பணிகளுடன் உருவாக்க உள்ளனர். சுவாரஸ்யமாக, இந்த கட்டிடம் சைதாப்பேட்டையில் உள்ள சுரங்கப்பாதையின் மீது வரும், மேலும் திட்டத்திற்கான ஏலத்தை மெட்ரோ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில், CMRL நிறுவனம் 1,666 சதுர மீட்டர் இடத்தைக் கண்டறிந்து, 3,142 சதுர மீட்டர் பரப்பளவில் ஏழு மாடிக் கட்டடம் கட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்கான விவாதங்களை மெட்ரோ நடத்தி வருகிறது, மேலும் இந்த இடத்தை கேமிங் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய மினி-மால் அல்லது பொழுதுபோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன. டெண்டர் இப்போது மதிப்பீட்டில் உள்ளது, விரைவில் திட்டத்தை இறுதி செய்வோம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+