சென்னை நகரின் மத்தியில்.. அடையாளமே தெரியாமல் மாறும் பேருந்து நிலையம்.. லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), வடபழனி பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இங்கே பேருந்து நிலையம் , பிரம்மாண்ட அலுவலகம், பெரிய பார்க் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை அப்பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடபழனி மெட்ரோ நிலையத்தில் வளர்ச்சித் திட்டங்கள்
வடபழனி பேருந்து நிலையம் இருக்க கூடிய பகுதியில், மொத்தம் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தரை தளத்தில் பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் இரண்டு தளங்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்துடன் கூடிய ஒரு கோபுரம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதிக்கு ஒரு புதிய தோற்றம் கிடைக்கும்.

முதலில், தரை தளத்தில் பேருந்து நிறுத்தங்கள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இரண்டு தளங்களுடன் ஒரு கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 6,50,000 சதுர அடி வாடகைக்கு விடக்கூடிய இடத்துடன் கூடிய 13 மாடிகளைக் கொண்ட அலுவலகக் கட்டிடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு பெரிய நகர்ப்புற பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில், 1.2 ஏக்கர் நிலத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் வடபழனி பேருந்து நிலையத்தின் தோற்றத்தை மாற்றும். இது அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற இடமாக மாறும். திட்டத்தின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும். இதேபோல் சென்னை ஜிஎஸ்டி சாலையில் மெட்ரோ உடன் சேர்த்து இரண்டு அடுக்கு பாலமும் அமைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ இரண்டு அடுக்கு பாலம்
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் சார்பாக ஏர்போர்ட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் செயல்முறையை மெட்ரோ தொடங்கி உள்ளது. 15.5 கிமீ தூரத்திற்கு சென்னை விமான நிலையத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் (KCBT) இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது.
First look at the integrated property development planned at Vadapalani Bus Depot by CMRL again...😌🙏
— Chennai Updates (@UpdatesChennai) June 10, 2025
🔹In Phase-1 a single tower with 2 basement parking and bus bays at GF planned
🔹 13 floors of office tower with approx leasable space of ~650,000 sq.ft
🔹A big urban park can… pic.twitter.com/ODayCAFInZ
இந்த ஜிஎஸ்டி சாலையில் மெட்ரோ உடன் சேர்த்து இரண்டு அடுக்கு பாலமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலே உள்ள மட்டத்தில் மெட்ரோ பாதை, முதல் மட்டத்தில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்படும். அதாவது முதல் மட்டத்தில் வாகனங்கள் செல்லலாம். இரண்டாம் கட்டத்தில் மெட்ரோ செல்லும். கிளாம்பாக்கம் வரை இந்த பாலம் அமைக்கப்படும். ஆனால் ஏற்கனவே பல்லாவரம் பகுதியில் பாலம் இருப்பதால்.. அந்த பாலம் முடிந்த பின்.. சில மீட்டர்கள் கழித்து இந்த இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்படலாம்.
இந்த மெட்ரோ பெரும்பாலும் ஜிஎஸ்டி சாலையைப் பின்பற்றி அதே ரூட்டில் அமைக்கப்படும். இதனால் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைகள் இருக்காது. இந்த திட்டத்திற்கு தேவையான 28 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது என்றும், மீதமுள்ள 30 ஏக்கர் பல்வேறு அரசு துறைகளுக்கு சொந்தமானது என்றும் CMRL உறுதி செய்துள்ளது. பல்லாவரம் மற்றும் பெருங்குளத்தூர் அருகே உள்ள தனியார் நில உரிமையாளர்களுடனும், விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலத்தை பெறவும் மத்திய அதிகாரிகளுடனும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இன்னொரு பக்கம் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இணைப்புக்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.,43.63 கி.மீ.தொலைவுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு, நான்கு நிறுவனங்கள் ஏலம் சமர்ப்பித்துள்ளன.
ஒரு வருடத்தில் திட்டம் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டிபிஆரில் மெட்ரோவின் சரியான நீளம், நிலையங்களின் எண்ணிக்கை, நடைபாதையின் வகை (நிலத்தடி/உயர்த்தப்பட்ட/அட்-கிரேடு), ரயிலின் வகை மற்றும் மொத்த செலவு போன்ற விவரங்கள் இருக்கும்.
அதன்பின் இதற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பயண சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. பரந்தூரில் மொத்தம் 2 மெட்ரோ நிலையங்கள் வர உள்ளன. உள்ளூர் விமான நிலைய பகுதிக்கு அருகே ஒரு ஸ்டேஷன், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஸ்டேஷன் என்று இரண்டு ஸ்டேஷன்கள் வர உள்ளன.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின் (DFR) முன்மொழியப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
1. வழித்தடத்தின் மொத்த நீளம்: 43.63 கி.மீ
2. பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள்: 19 (தோராயமாக)
3. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ 10,712 கோடி (தோராயமாக)












Click it and Unblock the Notifications